நில் திரும்பு புறப்படு
ஆசிரியர்:
அரிமாவளவன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81?id=1579-7910-9158-9383
{1579-7910-9158-9383 [{புத்தகம்பற்றி திராவிடத்தை அரவணைக்கிற எல்லோருமே இந்தியத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள்தாம்! பெரியார் முதல் விசயகாந்துவரை இது பொருந்தும்! இந்தியம் என்பது தமிழன் எங்கு தலை தூக்கினாலும் தாக்கும். திராவிடம் செய்வதும் அதுவே! இந்தியம் தன்னை உருப்பெருக்கி உருட்டும் மிரட்டும்! திராவிடம் உடனிருந்தே கொல்லும்!
<br/>} {பதிப்புரை நூறு தமிழறிஞர்கள் உண்ணாநோன்பு இருந்தபோது அவர்களைக் கைது செய்யத்தான் காவல்துறை முயன்றது. முடிவில் கண் துடைப்பிற்காக ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஆரவாரம் அடங்கியது. தமிழ் இன்று வரை பயிற்று மொழியாகவில்லை. மாறாக சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தரே, வளாகத்திற்குள் ஆங்கிலம் பேசு! என்று கட்டளையிடுகிறார். போராட்டங்களை எப்படித் தடுப்பது, நசுக்குவது, சமாளிப்பது, போராடுபவர்களை எப்படி ஒடுக்குவது, ஏமாற்றுவது என்று ஆயிரக்கணக்கான வழிகளைக் காந்தி தேசத்தின் காப்பாளர்கள் கற்றுத் தெளிந்து வைத்திருக்கிறார்கள். ஆயிரம் பேரைத் திரட்டி விண்ணும் மண்ணும் அதிர ஆர்ப்பரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் தூசியைத் துடைத்தெறிவது போல நடத்தி முடித்து விட்டுப் போய்விடுகிறது அரசு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866