நீதிக்களஞ்சியம்
ஆசிரியர்:
புலவர் குழந்தை
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1871-8182-7887-0046
{1871-8182-7887-0046 [{புத்தகம் பற்றி முன்னெல்லாம் முதல்வகுப்பிலிருந்தே ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நீதி நூல்கள் முறையாக மனப்பாடஞ் செய்யப்பட்டு வந்தன. இன்ன வென்றறியாமல் இளமையில் மனப்பாடஞ் செய்த அவை, பின்னர் பொருளுணரப்பட்டுப் பெரும் பயன் எய்துவிக்கும். செய்வன தவிர்வன கூறும் அந் நீதிச்செய்யுட்கள் வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்து, உயரிய நல்வாழ்வு வாழத் துணை செய்யும்.
<br/> தமிழ் நீதி நூல்களில் தலையாய திருக்குறள் இன்று ஒருவாறு தமிழ் மக்களால் போற்றப்படினும், நாலடியார் முதலிய ஏனைய நீதி நூல்கள் கண்ணெடுத்துப் பார்ப்பாரின்றி இறக்கும் நிலையில் இருந்து வருகின்றன. இப்படியே விட்டு வைத்தால் தமிழின் தனிச்சரக்காகிய அவை இறந்து படுமென்பதில் சிறிதும் ஐயமில்லை இன்றையத் தமிழ்ப் பாடத் திட்டமும், அந்நூற்பாக்களுட் பல இக்காலப் போக்கிற் கேற்ப இன்மையுமே அதற்குக் காரணமாகும். இந்நிலையைப் போக்கி, தமிழ் மக்கள் எல்லோரும் அவற்றை முன் போல், விரும்பிக் கற்றுப் பயன் பெறுமாறு செய்ய எழுந்ததே நீதிக் களஞ்சியம் என்னும் இந்நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866