நீலவல்லி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category நாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaper back
Pages 128
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மூத்த மகனான வரகுணவர்மன் தென்பாண்டி நாட்டில் முத்துக் களவு அதிகமாக ஏற்படுவதை விசாரிக்கவும், உக்கிரன் என்பான் கரகிரி அல்லது கரவந்தபுரம் என்ற ஊரை உக்கிரன் கோட்டை என்று பெயர் மாற்றி, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, புரிந்து வந்த மோசச் செயலை விசாரிக்கவும், பராந்தக பாண்டியன் என்ற தன் தம்பியை அனுப்பி வைக்கிறான். பராந்தக பாண்டியன் தான் இன்னானென்பதை அறிவிக் காமல், சாதாரணப் பயணியாகத் தென்பாண்டி நாட்டிற்குச் செல்கிறான். அங்கு நீலவல்லி என்ற அழகியைச் சந்திக்கிறான். அவள் சேரன் மகள் என்பதை அறிந்தும், அறியாதவன் போல் நடிக்கிறான். முத்துக் களவுக்கும், சேரன் மகளைத் துன்புறுத்திப் பலவந்தமாக அடைய முயன்ற குற்றத்துக்கும் காரண மெல்லாம் தனது உறவினனான ரகுநாத பாண்டியன் என்பதை அறிந்து அவனைத் தண்டிக்க ஏற்பாடுகள் செய்கிறான். அவனுக்கு உறுதுணையாக நீலவல்லியும் தென்பாண்டி நாட்டுப் பரதவரும் நிற்கிறார்கள்.
வெகு திறமையாகப் புலன் விசாரித்து உக்கிரனையும் நீலவல்லியையும் காப்பாற்றி, ரகுநாத பாண்டியனைத் தண்டிக்கிறான் பராந்தகன். ரகுநாத பாண்டியன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

நாவல்கள் :

வானதி பதிப்பகம் :