நெடுந்தொகைச் செல்வம்

ஆசிரியர்: மு.வரதராசன்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaper Back
Pages 192
Weight150 grams
₹60.00 ₹56.40    You Save ₹3
(6% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பதின்மூன்று அடிமுதல் முப்பத்தோரடி வரையில் அமைந்த அகப் பாட்டுக்கள். நாடக மேடையில் காணும் காட்சியைக் கண்டு தம்மை மறந்து உருகும் கலைஞரைப் போல், இந்தப் பாட்டுக்களைப் பாடியவுடன் புலவரின் கற்பனையுணர்ச்சியில் ஒரு பெரும் பங்கை உணரவல்லவரே இவற்றைக் கற்றவர் எனலாம். இத்தகைய கலையனுபவமே பழம் பாட்டுக்களைப் பல தலை முறையினரும் தொடர்ந்து போற்றுமாறு தூண்டி வருகிறது. நெடுந்தொகை அல்லது அக நானூறு என்னும் தொகை நூலின் பாட்டுக்களை இவ்வகையான கலையனுபவத்துடன் கற்று உணர்வார்க்கே அவை விருந்தாக விளங்கும். அதற்குமுன் அந்நூல் நல்கும் பல்வகைச் செல்வங்களையும் போற்றிப் பயிலும் பயிற்சி இன்றியமையாதது. நெடுந்தொகைச் செல்வம் என்னும் இந்நூல் இத்தகைய பயிற்சி பெற விரும்புவார்க்குத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.வரதராசன் :

இலக்கியம் :

பாரி நிலையம் :