நெருங்க... நெருங்க....

ஆசிரியர்: விஜயலட்சுமி ஜெகன்

Category குடும்ப நாவல்கள்
Publication மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன்
FormatPaper Back
Pages 304
ISBN0
Weight250 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விடியற்காலை பொழுது, பறவைகளின் சத்தம் கானமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அருவிகளில் நீர் விழும் ஓசை உஸ்ஸ்ஸ் என்ற சத்தம் கொஞ்சம் பக்கத்தில் கேட்டது. எங்கோ தூரத்தில் கேட்ட சில சத்தங்கள் ஏதோ மிருகங்களின் ஓசை போலக் கேட்டது. யானையின் பிளிறல் ஒலி சற்று பக்கத்தில் யானையின் நடமாட்டத்தை உணர்த்த, அங்கிருந்த கூட்டத்தில் ஒரே சத்தம், சண்டை , கூச்சல் குழப்பம் என ஒரே களேபரமாக இருந்தது.அவர்கள் மலைஜாதி மக்கள். அந்த கூட்டத்தின் நடுவில் நின்றிருந்த, சரவணன் எதுவும் பேசாமல் இருக்க,"எங்க ஜாதியில் இது பழக்கமில்லங்க. இவ சாகனுங்க. நீங்க போங்க எஜமான். நீங்க எங்களுக்காக எவ்வளவோ செஞ்சிருக்கீக.. இருந்தாலும் எங்க பழக்க வழக்கத்தை மாத்தக்கூடாதுங்க. நீங்க போயிருங்க எஜமான், எங்க புள்ள தலையெழுத்து இதுவாப்போச்சு.எம்புள்ளைய நல்லபடியா கண்ணாலம் பண்ணிக் குடுக் கனும்னு நினைச்சோமுங்க. இப்ப உசிரே போவபோதுங்க. எம்புள்ளயா இருந்தாலும் எங்க ஜாதி பழக்கம்தானுங்க முக்கியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
விஜயலட்சுமி ஜெகன் :

குடும்ப நாவல்கள் :

மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன் :