நெருப்பாறு

ஆசிரியர்: சின்னக்குத்தூசி

Category அரசியல்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 88
ISBN978-93-81828-47-2
Weight100 grams
₹55.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நக்ஸல் பெண் கைதி ஒருவர் உடல்நிலை மோசமான தன் தந்தையைப் பார்க்க அனுமதி கேட்கிறார். காவல்துறையின் இழுத்தடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தபோது அவரது அப்பா உயிரோடு இல்லை. இதுபோன்ற துயரங்களை, கைதிகள் சுமந்த வலிகளை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்து, காவல்துறையின் பாறைத்தனத்தை பறைசாற்றியிருக்கிறார் சின்னகுத்தூசியார். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தத் தொகுப்பு எதேச்சதிகார அரசின் இருண்ட காலத்துக்கான சான்றாக இருக்கிறது. இந்தத் தொகுப்பின் பக்கங்களில் காக்கிகளின் அரக்கத்தனமும் வன்மமும் கொப்பளிக்கிறது. இதழியல் சுதந்திரத்திற்கும் அரசியல்வாதிகளின் தார்மீக சுதந்திரத்திற்கும், ஜெ. அரசு சமாதி கட்டிய நிமிடங்களை இந்தத் தொகுப்பு பேசுகிறது. இப்படியும் ஒரு ஆட்சியா? என எதிர்காலம் கேள்வி கேட்க... இப்படியும் வக்கிரபுத்திக் காக்கிகள் இருந்தார்களா? என நாளைய சமூகம் திகைப்படைய... இந்தத் தொகுப்பு சரியான ஆவணப் பதிவு. நெருப்பாற்றில் நானும் நக்கீரன் தம்பிகளும் நீந்திய நாட்களுக்கு சாட்சிப் புத்தகமாக இருக்கும் இந்த தொகுப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
சின்னக்குத்தூசி :

அரசியல் :

நக்கீரன் பதிப்பகம் :