நோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பதிப்புரை 'பாரத தேசம் பாருக்கெல்லாம் திலகம்' என்பார்கள். அறிவியலிலும் ஆன்மிகத்திலும் வளத்திலும் நிலத்திலும் சிறப்புற்றோங்கும் புண்ணிய பூமி. அறிவுத் திறத்திலும் அறிவியல் வளத்திலும் உலகினரை ஈர்க்கும் பாரத பூமியில் பல்திற அறிஞர்களும் தோன்றி பெருமை சேர்த்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கிய வளம், காந்திய வழியில் அமைதி நலம், பொருளாதாரக் குறிக்கோள், மருத்துவ வசதிகள், அறிவியல் வித்தகங்கள் எனப் பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய மேதைகள் தோன்றியுள்ள பாரதத்தில் நோபல் பரிசு பெற்ற உலக மேதைகளை அறிமுகப்படுத்தும் நிலையில் "நோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள்” என்னும் இந்நூல் மலர்ந்துள்ளது.
மேற்படி பரிசுகள் சுவீடன் நாட்டைச் சார்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் என்பவரின் பெயரால் 1901ஆன் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூர், சர்.சி.வி.இராமன், டாக்டர் ஹர்கோபிந் குரானா, அன்னை தெரசா,டாக்டர் சந்திரசேகர், அமர்த்தியாசென், வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன், கைலாஷ் சத்தியார்த்தி என எண்மர் மேற்படி நோபல் பரிசினைப் பெற்றுள்ளனர். அவர்களுடைய வரலாற்றினைச் சுருக்கமமக இந்நூல் வழங்குகிறது. பள்ளி மாணவர்களுக்குப் பாடமாகும் தரமுடையது.
இந்நூலை பல்துறை வித்தக எழுத்தாளரான திரு.பட்டத்திமைந்தன் அவர்கள் அரிதின் முயன்று அருமையாகத் தொகுத்து எளிய நடையில் தெளிவாக வரைந்துள்ளார். இளைஞர்களுக்குத் தூண்டுகோலாக அமையும் வண்ணம் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :