பகவத் கீதை - ஓர் ஆய்வு
ஆசிரியர்:
த.அமலா
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+-+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?id=1384-5694-9815-6072
{1384-5694-9815-6072 [{புத்தகம்பற்றி காலஞ் சென்ற இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும் உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான திரு. ஜோசப் இடமருகு அவர்கள் 1934 செப்டம்பர் 7 ஆம் தேதி இடுக்கி மாவட்டத்தில் கிறிஸ்தவக் குடும்பமொன்றில் பிறந்தார். 1953 இல் கிறிஸ்து ஒரு மனுஷ்யன் என்ற மலையாள நூலை எழுதியதனால் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 1954 இல் ஸோளி என்ற பெண்ணை கலப்பு மணம் புரிந்தார். 1956 இல் கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு கேரளப் பகுத்தறிவாளர் சங்கத்தை உருவாக்க அரும்பாடுபட்டார். நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். 1977 இல் டில்லிக்கு இருப்பிடத்தை மாற்றினார். உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்துள்ள இவர், மொழிபெயர்ப்பு நூல்கள் உள்பட 100க்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சனல் இடமருகு இவரது மகனே. ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர் ஸ்கார்ணரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்ட இவரது மகள் கீதாவும் ஒரு எழுத்தாளரே.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866