பசுமைப் புரட்சியின் வன்முறை
₹120.00 ₹114.00 (5% OFF)

பசுமைப் புரட்சியின் வன்முறை

ஆசிரியர்: வந்தனா சிவா

Category சமூகம்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 228
ISBN978-93-80545-15-8
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



பஞ்சாப் நெருக்கடியை ஏற்கனவே பல அறிஞர்களும், விமர்சகர்களும் விவரித்தது போல, வெறும் மத, இன முரண்பாடாக குறுக்குவது, அடிப்படை பிரச்னையை திசை திருப்புவதாகும்; ஏனெனில், இம்முரண்பாட்டிற்கு அரசியல், பொருளாதார முகங்களும் உண்டு. இம்முரண்பாடுகள் இரு மத இனங்களுக்கு இடையேயான பிரச்னையை மட்டும் குறிக்கவில்லை; வேளாண்மை கொள்கை நிதி, கடன், வேளாண்மைப் பொருட்களின் விலை மற்றும் கொள் முதல் ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஒருமுகப்படுத்தியுள்ள ஓர் அரசிற்கும், விரக்தியடைந்திருக்கும் ஒரு வேளாண்மை சமுதாயத்திற்கும் இடையேயான பண்பாட்டு சமூக உறவுகள் முறிந்து பதட்டம் நில வு வ தை இது பிரதிபலிக்கிறது. இங்கு நிலவும் முரண்பாடு மற்றும் விரக்தியான சூழ்நிலையின் மையத்தில் பசுமைப்புரட்சி நிலை பெற்றுள்ளது. இன்றைய பஞ்சாபின் முரண்பட்ட தன்மையைப் புரிந்துகொள்ள இந்நூல் முயல்கிறது. புள்ளி விவரங்கள், பஞ்சாபை இந்தியாவின் மிக வளமான மாநிலமாகவும், இதர மாநிலங்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டிய ஒன்றாகவும் சித்தரிக்கின்றன. பஞ்சாபின் சராசரி தனி நபர் வருமானம் ரூ 2528. இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் ரூ. 1344 தான். அதாவது சராசரி பஞ்சாபின் வருமானம், சராசரி இந்தியாவின் வருமானத்தைவிட 65% அதிகம். 1981ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாபின் மக்கள் தொகை 1.67 கோடி. அதாவது இந்தியாவின் மக்கள் தொகையில் 2.5%க்கு சற்று குறைவு. ஆனாலும் நம் நாட்டின் உணவு உற்பத்தில் 7 சதவிகிதத்தை பஞ்சாப் உற்பத்தி செய்கிறது;

உலகுக்கு வேளாண் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்த மூதாதையர்களைப் பெற்ற நம் நாட்டில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், விவசாயம் தந்த நஷ்டம் பொறுக்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் , தற்கொலை செய்துகொள்ள நேரிட்டது. 60களில் பட்டினியை விரட்டுவதற்கு என்ற பெயரில் நம் நாட்டில் அரசு நடைமுறைப்படுத்திய 'பசுமைப்புரட்சி"தான் இதற்குக் காரணம். இரண்டாம் உலகப் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சியதால், அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண் முறைகளைக் கொண்ட 'பசுமைப்புரட்சி' உருவாக்கப்பட்டது. இன்று இரண்டாவது பசுமைப்புரட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று வீராவேசமாக உரையாற்றும் விஞ்ஞானிகள்தான். 'பசுமைப்புரட்சி' என்ற 'மிகப் பெரிய வரலாற்றுப்பிழை நிகழக் காரணம், விவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா? நமது ஆரோக்கியம். இன்று நம் உடலை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமை புரட்சிக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வந்தனா சிவா :

சமூகம் :

வம்சி புக்ஸ் :