பச்சை வயல் மனது

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 288
Weight300 grams
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசட்டென்று டி.வி. பெட்டியில் எழுத்துகள் நகர்ந்து விட, கவியரங்கத்தின் முகப்பு தெரிந்தது. காமிரா தாழ, தலைகள் உயர்ந்தன. இடது கோடி மூலையில் கல்பனா உட்கார்ந்திருந்தாள். பெரிய பூக்கள் போட்ட புடவையில் பின்னுக்குச் சாய்ந்தபடி கையில் உள்ள பேப்பர் கற்றைகளைச் சரிசெய்து கொண்டிருந்தாள்.
"ஹை... சித்தி... கல்பனா சித்தி. அம்மா, கல்பனா சித்திய பாரும்மா - எவ்ளோ அழகா இருக்கா...” ரமேஷ் கூவினான்.
வீட்டின் ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு அரையிரு ளில் உட்கார்ந்திருந்த சகோதரிகள் பையனின் ரசனைக்கு வாய் விட்டுச் சிரித்தார்கள்.
''அவ அழகுக்கு என்னடா கொறைச்சல்? அப்படியே தாத்தாவை கொண்டிருக்கா சரஸ்வதி!'' அக்கா மகனை அணைத்துக் கொண்டாள்.
"நான் கொஞ்சம் உரசம் இல்லக்கா?" டி.வி. எதிரே உட்கார்ந்து தன்னையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கல்பனா வினவி
னாள்.
"ம்... நல்ல உசரம்தான். அப்பா மாதிரி.''
"கண்ணாடில பார்க்கறச்சேகூட தெரியலை. என்னை நானே டி.வி-யில பார்க்கறச்சதான் ரொம்ப உசரமோன்னு படறது. கொஞ்சம் கூன் வேற போட்டுருக்கேன்."

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :