பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

ஆசிரியர்: குமரேசன் ஆர்

Category விவசாயம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 127
ISBN978-81-8476-464-2
Weight150 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான வருமானமோ கிடைப்பதில்லை. வறட்சி, வெள்ளம், காற்று என்று இயற்கையின் பாதிப்பாலும், பூச்சி, புகையான், வண்டு போன்ற நோய்த் தாக்கு தலாலும், ஆள் பற்றாக்குறையாலும், உற்பத்திக்கு ஏற்ப விலை கிடைக்காமலும் விவசாயத் தொழில் நசிந்து வருகிறது. உரிய வாழ்வும் வளர்ச்சியும் இல்லாததால், விவசாய வேலை செய்தவர்கள் வாழ வழி தேடி, நகரங்களில் கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களுக்கு பெயிண்டிங் வேலை செய்தல், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் காவல் புரிதல் என்று ஊர் ஊராக பெரும் நகரங்களுக்கு இடம்பெயர்வதும் கண்கூடு. அப்படிப்பட்டவர்களுக்கு, சிறு முதலீட்டில் தங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய வாழ்க்கை-வசதியை அமைத்துக்கொள்ள இந்த நூல் எடுத்துச் சொல்கிறது.தேனீ, காடை, புறா, வாத்து, வான்கோழி, கின்னிக் கோழி, காளான் என்று இவற்றை வளர்ப்பதை, பொழுதுபோக்காக, விளையாட்டாக, மனது லயித்து இந்த வேலைகளைச் செய்யலாம். வருமானத்தையும் ஈட்டலாம். அதோடு தாங்களே தொழிலதிபராக இருக்கலாம். அதற்கு வழிகாட்டும் மகத்தான நூல் இது!

எப்போதும் இயற்கை எதிர்பார்ப்புகள் இன்றி மனிதர்களை நேசித்துக்கொண்டே இருக்கிறது... மனிதன்தான் இயற்கையின் நேசத்தை உணராமல் திசை மாறிவிட்டான்.. என்பதற்கு இந்த நூல் மிகச் சிறந்த உதாரணம்! இன்றைய தேவைகளில் முதலிடம் வகிப்பது பணமே. பணத்தின் மீதே வாழ்க்கை நகர்கிறது... விரிந்த நிலப்பரப்பு, உயர்ந்த கட்டடங்கள், ஓராயிரம் தொழிலாளர்கள், அதிநுட்ப எந்திரங்கள், ஆளுயர பட்டங்கள் ஒன்றிணைந்தாலே பொருளாதாரத்தை ஈட்ட முடியும், பெருந்தொழில் புரியமுடியும் என்பது எல்லோருக்கும் சாத்தியமற்றது. மண்ணையும் தன்னையும் மட்டுமே நம்பி வாழும் மனிதர்களும் தொழில் அதிபராகலாம் என்பதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் உணர்த்துகிறது; மெய் சிலிர்க்க வைக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி அருகே உள்ள தூங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜு-செல்வி தம்பதியின் மகனான இவர், மனைவி அமுதா, மகன் கனல் அரசு, மகள் ஜனனி . ஆகியோருடன் வசித்து வருகிறார். பசுமை விகடன் இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பசுமை விகடன் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விவசாயப் பயிற்சிகளை நடத்தி வருகிறார். ஆடு-மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் விவசாயத் தொழில்கள் தொடர்பாக தமிழகத்தின் பண்ணைகளை நேரில் பார்த்து, விவசாயிகளின் அனுபவங்களை அறிந்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குமரேசன் ஆர் :

விவசாயம் :

விகடன் பிரசுரம் :