பதினெண்சித்தர்களின் தசதீட்சை

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
Formatpaper back
Pages 216
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசித்தர்களை ஞானம் நிறைந்த சிந்தனைச் செல்வர்கள் என்று திருவாடுதுறைப் புராணம் சொல்கிறது. சிவ வாக்கியர் விகாரமற்ற ஞானிகள் என்கிறார். சிந்தை தெளிந்தார் சித்தர் என்கிறது திருமந்திரம். வெந்து பக்குவப்பட்ட ஆன்மாக்கள் என்ற பொருளில் விதக்தர்கள் என்பார்கள். அவர்கள் அகமுகமாகப் பெற்ற ஞானத்தைத் திருமூலர் சொருகிக் கிடக்கும் துறை என்று பேசுவார். அவன் சிவன் தெளிந்த ஞானி என்கிறார் சிவவாக்கியர். அவர்கள் உயிர் அனுபவத்தைச் சித்தத்திலே சிவலிங்கம் காட்டி எனப்பாடுகிறது விநாயகர் அகவல்.
நுால்களை மேற்கோள் காட்டி அறிவாளிகளாகத் தம்மை ஆடம்பரப்படுத்தும் சமய ஜாலக்காரர்கள் மத்தியில் சுய அனுபவமே சாட்சியாய் விளங்கும் சமயப் புரட்சியாளர்களே சித்தர்கள். காலம் கடந்த சித்தனாய் மரணமற்றவனாய் வாழ்வு சுமத்தும் நிபந்தனைகளைப் புறந்தள்ளியவனாய் வாழ்பவன் சித்தன்.
இந்திய சம்பிரதாயத்தில் சித்தர்களை நாத சித்தர், ரசசித்தர், மகேஸ்வரசித்தர், சங்கதசித்தர் என்று நான்காக வகைப்படுத்துகிறார்கள். ரச சித்தர்கள் மருத்துவத்தில் வல்லவர்கள். சங்கத சித்தர்கள் பௌத்த சமயத்தவர். வடநாட்டில் வாழ்ந்த ஹடயோகிகள் நாத சித்தர்கள். தென்னாட்டைச் சேர்ந்த சித்தர்களே மகேஸ்வரசித்தர்கள். அவர்கள் தந்திர சாஸ்திரத்தில் சுத்தமார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :