பயணங்கள் பாடங்கள்

ஆசிரியர்: பேரா.இரத்தின நடராசன்

Category பயணக்கட்டுரைகள்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹55.00 ₹46.75    You Save ₹8
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'பயணம் இளமையில் கல்வியின் ஒரு பகுதி முதுமையில் அனுபவத்தின் ஒரு பகுதி' என்றார் ஒரு அறிஞர். 1958-59ல் நான் ஜோலார் பேட்டை மாவட்டக்கழக உயர் நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போது ஒரு நாள், சற்றும் எதிர்பாராத விதமாக 'உலகம் சுற்றும் தமிழன்' மறைந்த ஏ.கே. செட்டியார் அவர்கள் வருகை தந்தார். உலகம் சுற்றினேன், இலங்கை , நேபாளம், கயானாவும் கரிபீயன் கடலும் போன்ற பல நூல்களில் தனது பயண அனுபவங்களை, அந்த நாட்டு பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை , சுற்றுலா தலங்கள் என பலவற்றைக் குறித்து எழுதியுள்ளார். அவரின் நூல்கள் என்னுள் இத்தகைய நூல்களைப் படிக்க வேண்டும், பல இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. மேலும் இது போன்ற நூல்களை, கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள், அணைகள், ஆலைகள், தொழில்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுக் கொண்டு வரும்போது, அவருடைய வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்கும் மாணவர்களாக நாம் மாறிவிடுகிறோம். ஆறுகளைப் பற்றி அவர் எழுதும்போது, ஆற்றங்கரைகளில் உருவான நகரங்கள், நாகரீகங்களைப் பற்றிய செய்திகள் அறிந்து நம் விழிகள் வியப்பால் விரிகின்றன. பணிக்கலாச்சாரம் என்ற கட்டுரையில் 1+1 = 0; 1+1 = 3 என்று வர்ணிக்கும் செய்திகள் நம்மைச் சிந்திக்கவைக்கும் செய்திகள். பஞ்சாபியர்களை, துணுக்குகளுக்காக நாம் கேலி செய்கிறோம். ஆனால் பஞ்சாபில் ஒரு பிச்சைக்காரரைக்கூட காணமுடியாது என்று கூறுகிறார் ஆசிரியர். உழைத்து மட்டுமே வாழ வேண்டும் என்ற அவர்களுடைய உயரிய சிந்தனையை உயர்த்திப் பாராட்டுகிறார். பல இடங்களில் ஆசிரியருடைய சமுதாய உணர்வை நாம் காணமுடிகிறது. காஷ்மீர் மக்களுடைய திருமண வைபவங்களைக் குறிப்பிடும் அவர், ஒற்றுமையாக வாழும் மக்களிடையே, சில தீவிரவாதிகள் தோற்றுவிக்கும் பகைமை உணர்வுகளைக் குறித்து மனம் வருந்துவதை நாம் உணர்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.இரத்தின நடராசன் :

பயணக்கட்டுரைகள் :

ஏகம் பதிப்பகம் :