பாகிஸ்தான்

ஆசிரியர்: பா ராகவன்

Category வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 168
ISBN978-81-8368-033-2
Weight250 grams
₹180.00 ₹174.60    You Save ₹5
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரே ஆண்டு, ஒரே சமயம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்தரம் கிடைத்தது. எது இல்லாமல் போனாலும் ஜனநாயகம் இருப்பதால் நம்மால் வளர்ச்சிப்பாதையில் நடைபோட முடிகிறது. எதற்காகவும் ஜனநாயகத்தை பலியிடலாம் என்னும் நிலைப்பாட்டை எடுத்ததால் புறப்பட்ட இடத்திலேயே இன்னும் நின்றுகொண்டிருக்கிறது பாகிஸ்தான். இதுவரை நிகழ்ந்த யுத்தங்களில், எல்லை மோதல்களில், இரு தேசங்களுமே நிறைய இழந்துள்ளன. உயிர்களை, உடைமைகளை. மனநிம்மதியை, பாகிஸ்தானுடன் நல்லுறவு வளர்த்துக்கொள்வதற்காக இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை . அந்நாட்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் ஆண்டுதோறும் ராணுவத்துக்கே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு புதிர் தேசமாக மட்டுமில்லாமல், நிரந்தரப் போர் தேசமாகவும் பாகிஸ்தான் நீடிப்பது ஏன்?
முகம்மது அலி ஜின்னா தொடங்கி ஆஸிஃப் அலி ஜர்தாரி வரை பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகத்தை முன்வைக்கிறது இந்நூல். பரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லாத இந்த அரசியல் வரலாறு, குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்து, லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. விரிவாக்கப்பட்ட இந்தப் பதிப்பில், முஷரஃபின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்த கதையும் பேனசீரின் வாழ்க்கை முடிவுக்கு வந்த கதையும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா ராகவன் :

வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :