பாணர் இனவரைவியல் - இந்தியாவில் நாடோடிகளின் அசைவியக்கங்கள்

ஆசிரியர்: பக்தவத்சல பாரதி

Category ஆய்வு நூல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 276
ISBN978-81-7720-241-0
Weight300 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பாணர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவதுசங்க காலம்தான். அங்கே அவர்கள் வீரயுகப் பாடல்களைப் பாடியும் கலைகள் பல நிகழ்த்தியும் பரிசில் பெற்றார்கள். சமகாலத்தில் அவர்கள் எவ்வாறு அலைகுடிகளாகவும் மிதவைச் சமூகங்களாகவும் பரிணாமம் பெற்று, நாடோடிகளானார்கள் எனும் கதையை விவரிக்கிறது. இந்நூல். இதை வரலாற்றினூடாக வடஇந்தியாவுக்கும் , தென்னிந்தியாவுக்குமிடையே குறுக்கும் நெடுக்குமாக நடப்பதன் மூலம் பாணர்களின் பண்பாடு குறித்துபக்தவத்சல பாரதி ஒரு மானிடவியல் தொடர்ச்சியை முன்னெடுக்கிறார். இதன்மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட நாடோடிகளின் வாழ்வைப்புரிந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பை வழங்குகிறது இந்நூல். அத்துடன் நம்முடைய இருப்பையும் தொன்மையையும் இணைத்துப் பார்க்கும் விதமாக ஈர்ப்புமிக்க கழைக்கூத்தாடி, பூம்பூம் மாட்டுக்காரர், ஜாமக்கோடங்கி உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடோடிகளின் அசைவியக்கங்கள் குறித்துப் புதிய வெளிச்சத்தையும் அளிக்கிறது. இதனால் இந்நூல் தனது வகைமையில் முதலிடத்தைப் பெற்றுக்கொள்கிறது. தமிழ்ச் சமூக உருவாக்கம் பற்றிய தேடுதலில் அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
பக்தவத்சல பாரதி :

ஆய்வு நூல்கள் :

அடையாளம் பதிப்பகம் :