பாரதி காலமும் கருத்தும்

ஆசிரியர்: தொ.மு.சி. ரகுநாதன்

Category ஆய்வு நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 406
ISBN978-81-2341-225-2
Weight400 grams
₹570.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தொ.மு.சி. ரகுநாதனுக்குச் சிறப்புமிக்க சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த நூல் இது.

தமிழகத்தில் ஜீவானந்தத்துக்கு அடுத்தபடியாக சுப்பிரமணிய பாரதியின் பணிகளையும் பாட்டுகளையம் ஆராய்ந்து அவற்றின் சிறப்பைத் தமிழ் மக்களிடையே பரப்பி வந்தவர் மறைந்த புகழ்மிக்க எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன்.

பாரதி கவிஞரே அல்லர் என்றும், கவிஞர்தான், ஆனால் வேதாந்தக் கவிஞர் என்றும், உலகக் கவிஞர் அல்லர் தேசியக் கவிஞர் என்றும் பின்னர் மகாகவிஞர் என்றும் மதிப்பீடுகள் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளன.

சங்க காலத்திலிருந்து பல வளர்ச்சிப் படிநிலைகளைக் கடந்து முன்னேறிய தமிழரும் தமிழும் இருபதாம் நூற்றாண்டில் தலை நிமிர்ந்து வாழத் தொடங்கியது பாரதியாரால்தான் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. இதில் பாரதிதாசனின் பங்கும் பாத்திரமும் சிறப்புமிக்கவை.

ரகுநாதன் கூறுவதுபோல், "பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தை இந்த நூல் ஆராய்கிறது". எனினும், பல கோணங்களிலிருந்து திறமையாகச் செய்யப்படுகிறது.

ரகுநாதனுக்கு முன்னும் பலர் பாரதியை ஆய்ந்தனர். அவர்களுடைய கருத்துக்களைத் திறனாய்வு செய்தும் புதுச் செய்திகளைப் பல நூல்களிருந்து அரணாகத் திரட்டியும் தந்து நிறைவு செய்துள்ளார் ரகுநாதன். அரிய முயற்சி; சிறந்த பனி அதாவது ஏறத்தாழ தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக் கால அரசியல் சமூக மாற்றங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் மிக விரிவாக விளக்கிக் கூறும் ஆவணம் இது.உங்கள் கருத்துக்களை பகிர :
தொ.மு.சி. ரகுநாதன் :

ஆய்வு நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :