பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்)

ஆசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

Category வாழ்க்கை வரலாறு
Publication சந்தியா பதிப்பகம்
FormatHard Bound
Pages 1040
ISBN978-93-87499-14-0
Weight1.29 kgs
₹1000.00 ₹950.00    You Save ₹50
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பாரதி பிறந்த ஆண்டில் (1882) அவனுடன் சேர்ந்து மலர்ந்த செந்தாமரை சுதேசமித்திரன். அதில் பணிக்கு அமர்ந்த (நவம்பர் 1904) பிறகே அரசியல் எழுச்சி பெறுகிறான் பாரதி. ஆக, பத்திரிகை தொழிலே அவனது பிரதான காம். தனிமனித வட்டம் தாண்டிச் சமூக மனிதன் எனும் கூட்டுச் செயல்பாட்டிற்கு பாரதியை நகர்த்திய பெரும் பேறு சென்னையைச் சாரும். ஆகப் பெரிய காரியங்கள் அவன் புரிந்தது இங்குதான். அவனது கனவு', 'சின்னச் சங்கரன் கதை' என இரண்டிலும் சென்னை மற்றும் புதுவை புகலிடம் குறித்த குறிப்புகள் இடம் கொள்ளாத போதும் அவனால் பின்னாளில் எழுதிக் குவிக்கப்பட்ட அரசியல் வியாசங்கள் ஏனைய நட்டத்தை ஈடு செய்வன. ஆயினும் அவை யாவும் தர்க்கங்கள். நிலைப்பாட்டை விவரிக்கும் எதிர்வினைகள். அறத்தின்பால் பிறந்த கர்ஜனைகள். பதர்களைக் கலைக்கும் பக்கச் சார்புகள். பசப்பலற்ற பச்சை உண்மைகள். நியாயங்கள். நீதிகள், நேர்பட கிழித்த நேர்மைக் கோடுகள். உலகுக்கு உரைத்த கூக்குரல்கள், பெருஞ்சூறைக்கு அடங்காத சூளுரைகள். அகத்தை அளந்து காட்டும் அசல் வரிகள், வேக்காட்டை வெளிப்படுத்தும் வெள்ளை அறிக்கைகள், ஆகவே அவனது சுயவாழ்வு குறித்த உளவியல் சுவடுகளை அகத்தார் நல்கிய நன்தடைச் சித்திரத்தில் தேடித் தெளிகிறோம், சுற்றத்தார் சுட்டும் சுயக்குறிப்புகளை இட்டுச் சோதித்துப் பார்க்கிறோம். மனித வாழ்வென்பதும் எறக்குறைய ஒர் அறிவியல் கூடம் ஒமூக அறிவியலைச் சார்ந்தவன் மனிதன் இவ்விரண்டையும் மெல்லியக் கோடு ஒன்று சன்னமாய்ப் பிரிக்கும். இப்பிரிவும் ) (கோட்டைத்தான் பிறத்தியார் உதவி கொண்டு பிரித்தாய்கிறோம். பலரது பார்வைகளைக் கொண்டு பாரதி வாழ்வுக்கு ஓர் ஏக வடிவம் வழங்கும் முயற்சியே இந்நூல். பாரதியின் மன அவஸ்தைகள், நெருக்கடிகள் இவற்றைச் சித்தரிக்க முயல்கிறது 'பாரதி விஜயம்', ஒரு மனிதனின் நிறைகுறைகளைச் சகமனிதனின் உதவியைக் கொண்டு நயமாக அளவிடு செய்கிறது. சென்றுபோன நாட்களை ஆகச்சிறந்த பழம் பிரதிகளையிட்டு, நிரல் செய்ய விழைகிறது இந்தப் பென்னம் பெரிய திரட்டு, பல அரிய ஆக்கங்கள் முதன்முறையாக நூல் வடிவம் பெறுவது இதன் மாண்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

சந்தியா பதிப்பகம் :