பாரம்பரிய பாட்டி வைத்தியம்

ஆசிரியர்: குமுதா சாந்தாராமன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication சரண் புக்ஸ்
FormatPaper Back
Pages 240
Weight300 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நவீன மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத காலக் கட்டத்தில் நமக்கு கைக் கொடுத்தவை சித்தர்கள் அருளிய சித்த மருந்துகளும் மற்றும் பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட செலவில்லாத சிக்கனமான பாட்டி வைத்திய முறைகளும்தான்.சித்தர்கள் அருளிய சித்த மருத்துவ முறைகள் பற்றி பல ஏடுகளில் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடப்படாத வைத்திய முறைகள் நம் பாட்டிமார்களின் வாய்மொழியாக இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றன. நல்லது கெட்டது நாலும் தெரிந்தவர்கள் நமது பாட்டன் - பாட்டிமார்கள். அவர்கள் நமக்காக சேகரித்து வைத்திருந்த வாய் மொழியாக வரும் பல்வேறு விதமான மருத்துவக் குறிப்புகளைத் தொகுத்துத் தந்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் குமுதா சாந்தராமன்.அத்துணை மருந்துகளும் எளிதில் கிடைக்கக் கூடியவை. நாம் அன்றாடம் பயன்படுத்துபவை. அதிகச் செலவில்லாத சிக்கனமான மருத்துவக் குறிப்புகள்.
பல்வகைப்பட்ட நோய்களுக்கும் நம் நாட்டில் கிடைக்கும் மூலிகைகள், செடிகள், கனிகள், கொடிகள், கிழங்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கும் பலவிதமான பாட்டி வைத்திய முறைகள் உள்ளன. அவைகளின் தொகுப்பே இந்த நூல். இந்நூல் வாசகர்களுக்கு அருமையான பொக்கிஷம் என்றே சொல்லலாம். வாங்கிப் படித்து பாதுகாத்து வையுங்கள். உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இந்நூல் என்றுமே பயன்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

சரண் புக்ஸ் :