பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்

ஆசிரியர்: எஸ்.கே .பிஸ்வாஸ்

Category அரசியல்
Publication தலித் முரசு
FormatPaper Back
Pages 192
Weight300 grams
₹220.00 ₹213.40    You Save ₹6
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திட்டமிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுரண்டல், பாகுபாடு, ஜாதிய வெறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் போன்ற எவ்வித சமரசத்திற்கும் ஆளாகாத புரட்சிகர தலைவர் - மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த போதிலும் - தனது நோக்கத்திற்கு ஏற்ற தத்துவ வழியாக ஏன் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை? இக்கேள்விக்கு ஒரேயொரு பதிலை அளித்துவிட முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று, மார்க்சியம் ஒரு தத்துவமாக சாதிய சமூகத்துடன் பொருந்தவில்லை. மற்றொன்று, சாதி அடிப்படையிலான ஒரு காலகட்டத்திற்கு அதைப் பொருத்துவதன் அபத்தம். இந்து சாதிய சமூகத்தின் வட்டக் குழிக்குப் பொருந்தாத சதுரக் காயாக மார்க்சியம் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேம்பட்ட சமூக, பொருளாதார நிலையை அடைந்த பிறகே மார்க்சியம் பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

" நலிவுற்றோரின் இயற்கையான துணைவராகிய பெரியார், மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் பெரிதும் ஈடுபட்டு வந்த பின்னணியோடு சமத்துவம் மற்றும் சோசலிசத்தின் முன்னோடியாக இருந்தார். மனதின் ஆழத்தில் அவர் ஒரு மார்க்சியவாதியாகவும் இருந்தார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்ப்பனிய செயல்பாடுகளும் அவர்கள் மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திய முறையும் அவர்களின் சாதிப் பாகுபாடும் அவரை அவர்களுடன் இணைய அனுமதிக்கவில்லை . சோவியத் குடியரசின் சோசலிச கட்டமைப்பு மற்றும் அதன் இயங்குதன்மை குறித்து பெரியார் பெரிதும் பாராட்டி வந்தார். சோவியத் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய பிறகு ஈ.வெ.ரா. பெரியார், இந்தியாவில் உள்ள சாதியத்தின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் பிற நாடுகளில் உள்ள வகுப்புப் போராட்டங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.

கம்யூனிச சிந்தாந்தம் கற்றுக் கொடுப்பது என்னவெனில், பொதுவுடைமையும் பொதுவுரிமையும் இல்லாத நாட்டில் கம்யூனிசத்திற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதே. பொதுவுரிமை இல்லாத நாட்டில் கம்யூனிசத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் - கம்யூனிசத்தின் பலன்களை ஏற்கனவே அதிக உரிமைகளைப் பெற்று வந்தவர்கள் அனுபவிப்பதற்கு மட்டுமே - அது வழிவகுக்கும். இதுதான் கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
- எஸ். கே. பிஸ்வாஸ்

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

தலித் முரசு :