பாலியல் வாழ்வின் மறுபக்கம்

ஆசிரியர்: எஸ்.ஏ.செல்லப்பா

Category இல்லற இன்பம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 200
ISBN978-81-8476-429-1
Weight200 grams
₹90.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காதலும் போருமாக வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனத்தில், பாலுறவு பழக்க வழக்கத்தையும், அதனால் ஏற்பட்டு வந்த உடல்ரீதியான - மனரீதியான மாற்றங்களையும், அறிவியல்பூர்வமாக விளக்கிச் சொல்கிறது இந்த நூல்.
முறையற்ற உடலுறவு, இனப்பெருக்கக் குறைபாடுகள், குழந்தை பிறப்பு, பாலியல் தொற்று நோய்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் சுரக்கும் ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பற்றி எச்சரிக்கும் விதமாகவும் இந்த நூல் விளக்கிச் சொல்கிறது.
கொலை, திருட்டு, பெண் கடத்தல், குழந்தை கடத்தல், கள்ளத் தொடர்பு, கட்டாய விவாகரத்து... என சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் அனைத்துக்கும் ஆரம்பக் காரணம், ஆண்-பெண் பாலியல் பிரச்னைகள்தான் என ஆதாரத்துடன் விளக்குகிறார்
நூல் ஆசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா.
எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலியல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக்கொள்வது, தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் என்ன, குழந்தையின்மைக்கு என்ன காரணம், விவாகரத்தைத் தவிர்க்க வேண்டியதன் கட்டாயம் என்ன..? - இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் பாலியல் சிந்தனைகளையும், அதனால் விளைந்த சமூக மாற்றத்தையும், எழுந்த சிக்கல்களையும், தீர்வுகளையும் விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்து, இந்த நூலில் பதில் தரும் விதமாக நூல் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
ஆண்-பெண் உறவு மேம்பட கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், திருமண பந்தம் நீடிக்கத் தேவையான வழிமுறைகள், பாலியல் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை பற்றியும் இந்தத் தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தக்க தளமாக இந்த நூல் விளங்கும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
இல்லற இன்பம் :

விகடன் பிரசுரம் :