பிசினஸ் சைக்காலஜி

ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 120
ISBN978-81-8493-655-1
Weight150 grams
₹135.00 ₹121.50    You Save ₹13
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக்கிளைகளை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி.
வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது?
அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது?
அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது?
பொருள், சேவை என்று நீங்கள் விற்க விரும்புவது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளரின் மனதுக்குள் நுழைந்து, அவர்களுடைய உளவியலைத் தெரிந்து கொண்டால்தான் உங்களால் அவர்களுடைய தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்ய முடியும். அதேபோல் உங்களுடைய போட்டி யாளரின் உளவியலையும் நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும். அப்போதுதான் அவர்களை விடச்சிறப்பாக உங்கள் பொருளை அல்லது சேவையை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கமுடியும், இந்தப் புத்தகம் உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிசினஸ் சைக்கலாலஜியை மிக எளிமையாக, மிகவும் ஜாலியாகக் கற்றுக்கொடுக்கிறது. ஏராளமான எடுத்துக்காட்டுகளையும் வெற்றி ஃபார்முலாக்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் உங்கள் துறையில் நீங்கள்தான் வெற்றியாளர். ‘தி இந்து’ (தமிழ்) பத்திரிக்கையில் ‘தொழில் ரகசியம்' என்னும் தலைப்பில் வெளிவந்த பிஸினஸ் சைக்காலஜி கட்டுரைகளின் செழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு இது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :