பித்தப்பூ

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 88
ISBN978-93-86555-18-2
Weight100 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எல்லா சம்பவங்களும் கற்பனை - பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் எனக்குத் தெரிந்த வரையில் முழு உண்மை . இதில் சம்பந்தப்பட்ட யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ, குறை சொல்வதற்கோ
- எழுதப்பட்டதல்ல. தங்களைத்தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைப்பவர்கள்கூட என்னைத் தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக
- இதைக் கூறுகிறேன்.
தியாகு என்பவன் இருந்ததும், இறந்ததும் பழங்கதையாகப்
போய்விட்டது. அது நினைவிலிருப்பவர்கள் - அந்த அல்பாயுசில் போய்விட்ட முழு மனிதனின் நினைவில், அதில் தங்கள் குறைபாடு என்ன என்று கருதிப்பார்க்க
வேண்டிய அவசியமே கிடையாது.
ஒரு மனிதனைப் பற்றிய முழு உண்மையும் நெருங்கியிருப்பவர்களுக்குக்கூட பூரணமாகத்
தெரிவதில்லை இதில் தவறு ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் மன்னிப்பை நானும் தியாகுவிடம்
ஏராளமான மதிப்பு வைத்திருந்தவன், அவனுக்கு என்னாலான அளவில் நண்பனாக இருக்க முயன்றவன் என்கிற அளவில் முன் கூட்டியே மன்னிப்புக்
கேட்டுக்கொண்டு விடுகிறேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :