பிருந்தாவன் யாத்திரை

ஆசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்

Category பயணக்கட்டுரைகள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 277
ISBN978-81-7883-770-3
Weight800 grams
₹200.00 ₹150.00    You Save ₹50
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், "ராதாராணி கோபிகைகள் ராசலீலைகள் நடந்த போதெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணரின் குண்டலினி சக்தி சகஸ்ராரத்தை அடைந்திருந்தது" என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே, ராசலீலை சமயத்தில் எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணரின் மனம், "ஆன்மிகத்தின் எவரெஸ்ட்" என்று சொல்லத்தக்க நிர்விகல்ப சமாதி நிலையில் இருந்திருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன் லீலை நடந்தபோது கிருஷ்ணருக்கு வயது 8. ராதாராணியின் வயது 9. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர், ராதாராணி படங்களில் அவர்கள் வளர்ந்த நிலையில் கணவன்-மனைவிபோல் காட்டுகிறார்கள். அது உண்மையே கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு 11 வயது நடந்துகொண்டிருந்தபோது. ஸ்ரீகிருஷ்ணர் பிருந்தாவனத்தை விட்டு, மதுராவிற்குப் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வாழ்நாளில் ஒரே ஒரு முறைகூட பிருந்தாவன் வந்ததில்லை. ! நான் மூன்று முறை பிருந்தாவன் சென்றபோது கண்டும். கேட்டும் அறிந்த செய்திகளை மட்டும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். விரஜ மண்டலத்தில் பல இடங்கள் இருக்கின்றன. இவற்றை ஒருவர் முழுவதும் தரிசிக்க வேண்டுமானால் அதற்குக் குறைந்தபட்சம் சுமார் 25 நாட்கள் ஆகும். அவ்விதம் 25 நாட்கள் பிருந்தாவனத்தில் தங்கி இருக்க முடியாதவர்கள், 5 நாட்கள் அங்கு தங்கி ஸ்ரீ கிருஷ்ணரைத் தரிசிக்கலாம். "இந்த நூல் ஸ்ரீமதி ராதாராணியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காகவே எழுதப்பட்டதாகும்.

- சுவாமி கமலாத்மானந்தர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி கமலாத்மானந்தர் :

பயணக்கட்டுரைகள் :

ராமகிருஷ்ண மடம் :