பிரும்ம இரகசியம்

ஆசிரியர்: ர.சு.நல்ல பெருமாள்

Category தத்துவம்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 296
Weight250 grams
₹150.00 ₹127.50    You Save ₹22
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பல ஞானிகளிடமிருந்து ஞானத்தைச் சேகரிக்க நசிகேதன் என்ற இளம் ஞானியைத்தான் தேர்ந்தெடுத்தேன். இவன் ஏற்கெனவே ஞானத்தைப் பெற, யமலோகம் வரை பயணம் செய்து, யமதர்மனின் மாளிகை வாசலில் மூன்று நாள்கள் உண்ணாவிரதம் இருந்து யமதர்மனையே தனக்குக் குருவாக அடைந்தானாம். விஷயத்தை வைராக்கியத்துடனிருந்து ஆழ்ந்து கவனிக்கும் நசிகேதன் மூலமே, நாமும் ஞானிகளை நெருங்கிப் பாடம் கேட்கலாம்.
இதில் பிரும்ம இரகசியத்தை உங்களுக்கு எடுத்துக் காட்ட வரவில்லை. அந்த ஆற்றல் எனக்கில்லை. சிந்தனைக் காட்டுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பேயிருந்த ஞானிகளின் சிந்தனைகள் காடு மாதிரி மண்டிக் கிடக்கின்றன. அந்தக் காட்டுக்குள்ளிருக்கும் சில பாதைகளின் திசைகளை மட்டுந்தான் என்னால் காட்ட முடிந்திருக்கிறது. நீங்கள்தாம் அதில் நுழைந்து இரகசியத்தை உணர வேண்டும். சிந்தனைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லும் பணிதான் என்னுடையது. மற்றவையெல்லாம் உங்கள் பொறுப்பு! இனி, மேலே படியுங்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ர.சு.நல்ல பெருமாள் :

தத்துவம் :

வானதி பதிப்பகம் :