பிற்கால நீதி இலக்கிய வரலாறு

ஆசிரியர்: கதிர் முருகு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 288
ISBN978-93-80218-66-3
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிற்கால நீதி இலக்கியங்கள் சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட அறங்களை எடுத்துக் கொண்டும், புதிய அறங்களைக் கொண்டும் வளமார்ந்த நிலையில் கருத்துகளைக் கூறி யிருக்கின்றன. காலத்திற்கேற்ற அறங்களும் புதுமைகாணும் விழைவும் மக்களை நன்னெறிப்படுத்தும் நோக்கமும் இலக்கியங்களின் வாயிலாகத் தெளிவாக விளங்குகின்றன. சங்கம் மருவிய காலம் போராட்டமான காலமாக அமைந்தது. மக்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடுகளும் மாறுபட்டன. அதன் அடிப் படையில் புலவர்கள் மக்களை நன்னெறிப்படுத்தும் நோக்குடன் இலக்கியங்களைப் படைத்தளித்தனர். ஒருவகையில் பிற்கால நீதி இலக்கிய வளர்ச்சிக் காலமும் குழப்பம் மிக்கதாகவே அமைந்தது. பல மதத்தவர்கள், அன்னியர்களின் வருகை, பல மொழிகளின் பயன்பாடு எல்லாம் நிலையற்ற தன்மையினை உருவாக்கியதன் விளைவாக இக்காலப் புலவர்கள் புதிய நீதிகள் பலவற்றையும் சேர்த்து, நீதி இலக்கியங்களைப் படைத்தளித்தனர். மொத்தத்தில் சங்கம் மருவிய கால நீதி நூல்களும் பிற்கால நீதி நூல்களும் மக்களை நெறிப்படுத்தும் நோக்கில் படைக்கப்பட்டவையாகும் அவ்வறங்களை எல்லாம் ஏற்று வாழ்க்கைப் பாதையைச் செம்மைப் படுத்திக் கொள்ளுதல் நம் கடமை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :