பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்

ஆசிரியர்: அரவிந்தன்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 108
ISBN 978-93-81969-13-7
Weight400 grams
₹245.00 ₹230.30    You Save ₹14
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த அசாதாரணமான புத்தகம் அதன் கதையை எவ்வாறு சொல்லியிருக்கிறது என்பதைப் பற்றிச் சில விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்ய விரும்புகிறேன். 19ஆவது மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் வரலாறு ஒரு நாடக மேடையாகவே எதிர்கொள்ளப்பட்டது, உருவகிக்கப்பட்டது. பெண்களும் ஆண்களும் தங்கள் விதியைத் தேர்ந்தெடுக்கவும், அதை வென்றெடுக்கவும், கூடுதலான நீதியுணர்வு நிரம்பிய ஒரு வாழ்வுக்காகவும் போராடிய ஒரு மேடை. லட்சியக் கனவுகளை விதைத்தவர்கள், அரசியல் சிந்தனையாளர்கள் மற்றும் செயல் வேகம் கொண்ட அரசியல்வாதிகள் இவர்களில் சிலர் ஆட்சியாளர்கள், மற்றவர்கள் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரின் சொர்கள் இந்தப் போராட்டங்களுக்கு உத்வேகம் அளித்தன; துணை நின்றன. இத்தகைய வரலாற்று மேடை, அதன் கம்பீரமான முகப்பு வளைவோடும், நாடக அரங்கில் உள்ளது போன்ற இருக்கை வசதிகளோடும், நாடகத்தன்மையிலான ஒளி, ஒலி அமைப்புடனும் கவிதைகளிலும் கதைகளிலும் அரசியல் கூட்டங்களிலும், ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளிலும், பாடல்களிலும், பகிர்ந்துகொண்ட கனவுகளிலும் உருவகிக்கப்பட்டது. இன்று அது இல்லை . கற்பனையான இந்த நாடக மேடை தகவல் தொடர்பு வல்லுனர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. ஊடகங்கள், எதிர்காலமற்ற அரசியல்வாதிகள், உலகப் பொருளாதார அமைப்பு ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்த வரலாற்றையும் வாழ்வின் ஒவ்வொரு பரப்பையும் வெறும் லாபத்துக்கான வேட்டையாகச் சுருக்கிவிட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரவிந்தன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :