புகழ் பெற்ற இந்தியப் பெண்மணிகள்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜான்சி ராணி லட்சுமி பாயிலிருந்து அருணா அசஃப் அலி வரையிலுள்ள புகழ் பெற்ற பன்னிரண்டு இந்தியப் பெண்மணிகளின் வீர வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு பெண்மணியும் ஒவ்வொரு விதத்தில் பெரும் புகழுடன் சிறந்து விளங்கி நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவராவர்.
ஆங்கிலேயரை அந்த நாட்களிலேயே துணிவுடன் எதிர்த்து நின்று வீரப் போரிட்ட ஜான்சி ராணி சரித்திரப் புகழ் பெற்று விட்டார். இவர் அரச குலத்தில் பிறக்காவிட்டாலும், ஜான்சி மன்னரை மணந்து கொண்டதால் ராணியாகி ஆட்சியின் நுட்பங்களையெல்லாம் அறிந்து கொண்டு, தொல்லை கொடுத்து வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் செய்து வந்தார். நம் இந்திய நாட்டிற்குச் சுதந்திர உணர்வை ஊட்டுவித்த பெண்மணியென்றும் பெருமையுடன் இவரைப் பற்றிக் கூறலாம். ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த போரில் ஆணுடை தரித்து வீரமுடன் போரிட்டுப் பலரை வெட்டிச் சாய்த்தவர் இந்த வீரப் பெண்மணி; இறுதியில் ஆங்கிலேயன் ஒருவனால் வெட்டப்பட்டு வீர மரணமடைந்தவர் இந்தப் பெண்மணி.
இவ்விதம் இந்த நூலிலுள்ள ஒவ்வொரு இந்திய பெண்மணியும் உண்மையில் புகழ் பெற்று சிறந்தவர்களே யாவர் ;அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை நாம் படித்து மகிழ்வோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :