புதிய சமய உருவாக்கங்கள்

ஆசிரியர்: குணா

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaper back
Pages 26
Weight50 grams
₹15.00 ₹14.25    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சென்னை பூந்தண்மல்லிதூயநெஞ்சக் குருத்துவக் கல்லூரியின் மெய்யியல் துறை நடத்திய 'சமயத்தின் வேர்களைத்தேடி' என்னும் கருத்தரங்கில் தி. பி. 2026 நளி 9(நவம்பர் 25, 1995) அன்று ஆற்றிய உரை இது. இவ்வுரை திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.
இக்குறுநூல், ஒருவகையில் (உரைநடை வடிவிலான) இன்னோர் ஆற்றுப்படை நூலேயாகும். தமிழ்க் கிறித்துவர்களைத் தமிழர் தேசிய விடுதலை இறையியலின்பால் ஆற்றுப்படுத்துகிற நோக்கத்திலமைந்த நூல் இதுவாகும்.
இந்த உரையை ஆற்றியபோது அந்தக் குருமடத்தின் அரங்கின் சுவர்களின் மேல் ஈ. வெ. இராமசாமி நாயக்கனின் 'பொன் மொழிகள் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. அப் புன்மொழிகளைக் கண்டு அகத் துள் சிரித்துக்கொண்டே நான் இவ்வுரையினை ஆற்றினேன். தமிழர் தேசியக் கருத்தியலின் எழுச்சியின் எதிரொலியாக அக் குருமடத்தில் வடுக மாணாக்கர்களுக்கும் தமிழ் மாணாக்கர்களுக்கும் இடையில் அப்போது நெருடல்கள் இருந்துவந்ததாக அரசல் புரசலாகக் கேள்வி யுற்றிருந்தேன். அதன் வெளிப்பாடாகவே அப் புன்மொழிகள் எழுதி ஒட்டிவைக்கப்பட்டிருந்தன போலும்.
சமயமாயிருந்த ஒரு கலக இயக்கம், மதமாக இறுகியதைப்பற்றி இந்நூல் விளக்குகிறது. கிறித்துவமும்கூட அதற்கு விலக்கில்லை என் பதையும் காட்டும். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மேலை நாட்டுக் கிறித்துவ விடையூழியர்களால் தமிழர் வாழ்வியலில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றியும், பழமைச்சாதி சனாதன) நெறியைக் கட்டிக் காக்கும் போங்கில் ஆங்கிலேயரின் காலத்தில் அவற்றின் எதிர்வினை யாகத் தமிழகத்தில் முதன்முதலாகத் தோன்றிய அரசியல் அமைப்பு களைப் பற்றியும் இந்நூல் கருத்துரைக்கிறது. மதமாற்றமே இன்றைய 'இந்து - இந்திய அரசியல் கொம்பு சீவிக்கொண்டு
இலத்தீன் அமெரிக்கச் சூழலில் அங்கிருக்கும் கிறித்துவத்திருச் முட்ட வரும் சிவப்புத் துணி என்பதையும் நூல் எடுத்துக்காட்டுகிறது

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

தமிழ்த் தேசியம் :

தமிழக ஆய்வரண் :