புத்தர் வைத்திருந்த தானியம்

ஆசிரியர்: மெளனன் யாத்ரீகா

Category
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 90
ISBN978-93-87707-81-8
Weight150 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மெளனன் யாத்ரிகாவின் கவிதைகளைநிலக்காட்சிகளின் தொகுப்பு என்று முதல் பார்வையில் எளிதாக மதிப்பிடலாம். அந்நிலக்காட்சிகளுக்குள் பொதிந்திருக்கும் வலிகளும் வேதனைகளும் சமகாலத்தன்மை கொண்டு மனசாட்சியைத் துக்கத்தால் நிரப்பி நம்மை நிம்மதி, - இழக்கச் செய்கின்றன. மரபின் செழுமையான சொற் சேர்க்கை, தொடர்ச்செறிவு ஆகியவற்றிலிருந்து ஓர் அகப்பைமொண்டு சிக்கனமாக ஒவ்வொரு கவிதையிலும் கொஞ்சம் கொஞ்சம் எனச் செலவழித்திருக்கிறார். நேரடி உவமைகள் அம்பெனப் பாய்ந்து கிழித்துச் செல்லும்'ஓசைகள் அதிரச் செய்கின்றன, இடையிடையே 'அகப்பாடல்களும் கலந்திருக்கும் இத்தொகுப்பு இயைந்த சந்தமும் நிறைந்து பெரிதும் ஈர்க்கின்றது.

இந்த தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் , விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் , பொருள்களான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா. முறைமையின் திரிந்த மருதம், மாதுளையின் தேன்பரல்கள், சருகலம் மொத்தமும் சபலம் போன்ற காட்சிப்படிமங்கள் சிலதுளிகள். ஒவ்வொரு கவிதையிலும், விதந்து எழும் படிமக்காட்சிகள் வழியாக தனிமனித உயிரியின் காமத்தவிப்புகளும் புறநிலை யதார்த்தங்களின் நெருக்கடிகளும் உண்டாக்கும் சிக்கலில் நீந்தித் திணறும். மனம் ஒன்றின் பரிதவிப்பை வாசிக்க முடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மெளனன் யாத்ரீகா :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :