புத்ர, அபிதா, சௌந்தர்ய...
ஆசிரியர்:
லா.ச. ராமாமிர்தம்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%2C+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%2C+%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF...?id=1306-7680-6892-2100
{1306-7680-6892-2100 [{புத்தகம் பற்றி பிறக்கும்போதே சாகப்போகிறேன், சாகத்தான் சாவேன் எனச் சாகும் சித்தத்தில் உருவெடுப்பாய்ப் பிறக்கிறீர்கள். ஆதலால் வயதைப் பற்றியன்றி வேறு நினைப்பு உங்களுக்கு ஏது? சாகவும் தைரியமில்லை. பிறக்கவும் வெட்கமில்லை. இரண்டும் உங்களை விடவும் இல்லை. பேச்சுக்கும் குறைச்சலில்லை. கை நிறைந்து வந்து, விரலிடுக்கில் கொண்டுவந்ததை வழிந்து ஓடவிட்டபின், உள்ளங்கையை நக்கிக்கொண்டு, கொண்டுவந்ததையெல்லாம் கண்டு கொண்டேன் என்று நீங்கள் அடிக்கும் தம்பட்டத்தில் யாரை ஏமாற்றுவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பாவம்? உன் வயதுக்கணக்கில் என்னை அளவெடுத்தால் உன்னைப் போல், எத்தனை பேரை விழுங்கியிருப்பேன் தெரியுமா? எங்களுக்கு அறியக்கூடத் தெரியாது. அறிஞ்சு என்ன ஆகணும்? அறிய அறிய , துன்பம் ஏது குறையுது? அதிகம்தான் ஆகுது. காத்திருப்பதும் - எதற்காக என்றுகூட எங்களுக்குக் கவலையில்லை - காத்திருப்பதும், காவல் கிடப்பதும் தான் எங்கள் ரகஸ்யம். நீ வேணுமானால், முடியுமானால், தேடி எடுத்துக்கொள்.நாங்கள் கரையாகவும் படுகையாகவும், கல்வடித்த கண்ணீரே இந்தக் குளமான காரணம் கண்டுபிடி. இதெல்லாம் லேசா? எங்கள் ரஹஸ்யம் புரிந்துகொள்ள, முன்னால் உன் சிக்கிலிருந்து விடுபடு. இடம், பொருள், ஏவல், காலத்தின் ஒன்றையொன்று இழுப்பில் நீயே மாட்டிக்கொண்டிருக்கிறாய்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866