புரிந்ததும் புரியாததும்
ஆசிரியர்:
சத்குரு
தமிழில் : அ. ராஜ் மோகன்
விலை ரூ.145
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1502-7319-5874-0135
{1502-7319-5874-0135 [{புத்தகம்பற்றி மதங்களும் முந்தின தலைமுறையினரும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லாமல், எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லையில்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோக மையத்தை நிறுவியவர். உலகெங்கும் பல இலட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்த நூலில் யோகா, தியானம், உள்ளுணர்வு, சொர்க்கம்-நரகம், மாந்திரீகம், பகுத்தறியும் மனம் இவை பற்றி எல்லாம் யாராவது பேசிக் கேட்கும்போதோ அல்லது தேடிப் 'படிக்கும்போதோ, ஒரு நேரத்தில் புரிந்தது போலவும் இன்னொரு நேரத்தில் புரியாதது போலவும் இருக்கிறது. யாராவது தகுதியான ஒரு நபர், இவை பற்றி நமக்கு தெளிவாக விளக்க மாட்டார்களா என்னும் ஏக்கத்தில் இருந்த மக்கள், சத்குருவின் சத்சங்கங்களை கேட்கும்போது, பல வருட குழப்பங்கள் நீங்கி, இயல்பாகவே மகிழ்ச்சி அடைகின்றனர். அது போன்ற சத்சங்கங்களில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு சத்குருவின் தெளிவான பதில்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலைப் படிக்கப் படிக்க, உங்களின் நெடுநாள் குழப்பங்களும் கூட விடைபெற்று, உங்களிடமும் மகிழ்ச்சி வெளிப்படுவது நிச்சயம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866