புலித்தேவன்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category கதைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 120
Weight100 grams
₹60.00 ₹56.40    You Save ₹3
(6% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புலித்தேவன் நாடக நூல்
காட்சி 1-அ
நிழல் காட்சியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை
(சேவகன், கவர்னர், ரஹ்மான், இன்னிஸ்)
காட்சி 1-ஆ
பகல் காட்சி
(பேரறையில் பிரிட்டிஷ் கவர்னர், கரங்களை முன்னால் கட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக உலவிக்கொண்டிருக்கிறார். அந்த வேளையில் ஒரு சேவகன் வருகிறான்.) சிப்பாய்: மை லாட்! தங்களுடைய பேட்டிக்காக இன்னிஸ்
துரை அவர்களும், ஆற்காட்டு நவாபின் தளபதி ரஹ்மான் அவர்களும் காத்திருக்கிறார்கள். அவர்கள் வர அனுமதி உண்டா ?
கவர்னர்: வரசோலு, லெட் தெம் கெட் இன், வரசோலு வரசோலு!
(இன்னிஸ் துரையும் ரஹ்மானும் உள்ளே வருகிறார்கள். இன்னிஸ் அட்டென்சனில் நின்று சல்யூட் அடிக்கிறான்.
ரஹ்மான் சலாம் செய்கிறான்.) இன்னிஸ்: இன்னிஸ் ரிப்போர்ட்டிங்...
கவர்னர்: அட்டீஸ்... ரஹ்மான் சாகேப், உட்காருங்கள், டேக் யுவர்சீட். ரஹ்மான், நீங்க கேட்டுக்கிட்டபடி நம்ப பிரிட்டிஷ் கம்பெனி உங்களுக்கு உதவி செய்யுறதுன்னு முடிவு பண்ணிட்டாங்கோ! உங்க அதிகாரத்தைத்ச் சவுத் இந்தியா பூராவும் பரப்பி வரிவசூல் செய்யிற முயற்சிலே நாங்க உதவி செய்யுறோம்... இன்னிஸ். அதுக்காக உன்னைப் போட்டிருக்கு! ரஹ்மான், நீங்க போயி உங்க படைகளைத் தய்யார் பண்ணுங்கோ!
(ரஹ்மான் சலாம் செய்தபடி செல்லுகிறான்)
இன்னிஸ் : ஐ பெக் யுவர் பார்டன் ஸார் நம்ப இங்கிலீஸ் படைகளை ஆற்காடு நவாபுக்கு உதவியாக அனுப்புறதா...
கவர்னர்: ஆமாம் மேன். பிரஞ்சுக்காரன் இங்கே நாடு பிடிக்கத் திட்டம் போடுறான். அவனுக்கு முன்னாடியே நாம்ப இந்த நாட்டைப் பிடிச்சுடணும். அந்தத் திட்டத்தோக்கு இதுதான் பஸ்ட் ஸ்டெப்! நீ ஜாக்கிரதையா நடந்துக்கோணும்! இதுதான் பிரிட்டிஷ் ராஜ்யத்தை இங்கு நிலை நிறுத்துறதுக்கு முதல்லே ஆரம்பிச்ச திட்டம்! முதல் திட்டம்! ஹா... ஹா...ஹா...!

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

கதைகள் :

மணிமேகலைப் பிரசுரம் :