புல்லினும் சிறியது

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 46
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இயற்கையை வெறும் கண்களால் பார்த்து 'தெரிந்து கொள்ளமுடியாது என்கிறார்கள். அது உண்மையே இயற்கை என்றவுடன் நமக்குப் 'பச்சை நிறமே நினைவிற்கு வருகிறது. ஆனால் இயற்கையின் நிறம் பச்சை மட்டுமில்லை. 'செம்பழுப்பும் மஞ்சளும் இளஞ் சிவப்பும், 'இயற்கையின் நிறங்கள்தானே. மனதை நாம் 'பசுமையோடு மட்டுமே பழக்கி வைத்திருக்கிறோம், 'இயற்கையைக் காணுவது ஒரு கலை. அதை நாம் முயன்று பழக வேண்டும்.

அமெரிக்கா சென்றால் தோரோவின் வால்டன் குளத்தைப் பார்வையிட வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். ஹென்றி டேவிட் தோரோ (Henry David Thoreau) காந்தியின் குரு. இயற்கை அறிதலுக்கு ஒரு ஆசான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கச் சென்றிருந்தபோது வால்டனை காணும் கனவு நிறைவேறியது. பாஸ்டன் பாலாஜியோடு வால்டன் குளத்தைக் காணச் சென்றிருந்தேன். மாலை நேரத்தின் மஞ்சள் வெளிச்சம் படர்ந்த தூய்மையான சாலை. வாகன இரைச்சலே இல்லை. நெடிதுயர்ந்த மரங்களைப் பார்த்தபடியே வந்தேன். வால்டன் குளம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பகுதியில் உள்ள 61 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளமாகும். எழுத்தாளரும் இயற்கை ஆர்வலருமான தோரோ இக்குளத்தின் அருகில் 1845லிருந்து 1847 வரை தனியாக இரண்டு ஆண்டுகள் ஒரு மர வீட்டில் தங்கி வாழ்ந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

பூவுலகின் நண்பர்கள் :