பூரணத்துவம் நிறைந்த குரு
ஆசிரியர்:
ஓஷோ
தமிழில் : சிவதர்ஷினி
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81?id=1060-5221-6675-4867
{1060-5221-6675-4867 [{புத்தகம் பற்றி குரு என்பவர் தேடிக் கண்டறிய வேண்டிய விந்தை விஷயமல்ல. அவர் உங்களுக்குள் இருக்கிறார்.அதனால்தான் சீடராக மாறுவதற்குத் தயார் நிலையில் இருப்பது, வேட்கையுடன் இருப்பது, ஆவலுடன் இருப்பது, உண்மையைத் தேடும் பெருவிருப்பம் கொண்டிருப்பது, போன்ற விஷயங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை பற்றாக்குறையாக இருக்கின்றன. ஜனங்கள் குருவைத் தேடுகிறார்கள் அவர்களால் கண்டு கொள்ள முடியாது போனால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை . அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. பல குருநாதர்களிடம் செல்வார்கள். சரியானவரைத் தவறவிட்டு விடுவார்கள், நீங்கள் குறைபாடுள்ளவராக இருக்கும்போது குருவை எப்படிக் கண்டறிய முடியும்? சீடராக இருப்பது எப்படி என்று தெரியாதபோது குருவை எவ்வாறு கண்டறிய இயலும்? குருவைத் தேடுவது என்பது நல்ல சீடராக இருப்பதில் - துவங்குகிறது. நல்ல சாதகர் குருவைப் பற்றிக் கவலை கொள்ளமாட்டார். சீடனாக இருக்கும் பண்பைத் தன்னுள் உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதில்தான் கவனம் செலுத்துவார். கற்றுக் கொள்பவராக எப்படி மாறுவது, களங்கமற்று எப்படிச் செயலில் ஈடுபடுவது, 'அறிவு என்ற தளத்தில் இல்லாமல் எவ்வாறு செயல்படுவது' என்பன குறித்து அவர் யோசிக்கிறார். நீங்கள் அறிவின் துணையோடு செயல்பட்டால் பல ஆசிரியர்களைக் கண்டறியலாம். ஒரு குருவைப் பெற்றிட இயலாது} {பதிப்புரை சில தருணங்களில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவ தில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, நீங்கள் எங்கே போகிறீர்கள், என்ன பலன் பெறவிருக்கிறீர்கள் என்றெல்லாம் அலட்டிக் கொள்வதேயில்லை. என்ன நடந்திருக்கிறது, இனி என்ன நடக்கப் போகிறது என்பதெல்லாம் பெரிய விஷயங்களாகவே தெரிவதில்லை. காரியங்கள், செய்ய வேண்டிய பணிகள், கடமைகள், ஏன் அன்புக் குரியவர்கள் பற்றியும்கூட யோசிப்பது கிடையாது. இந்த தருணங்களில் இதயத்தில் அடியாழத்திலிருந்து ஒரு கிசுகிசுப்பான குரல் உங்களுக்குக் கேட்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866