பூ மலரும் புல்லாங்குழல் கிருஷ்ணா 5

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 290
ISBN978-81-8402-124-0
Weight200 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



முதலாவதாகக் கண்ணன் செயல்களிலிருந்து விடுபட வேண்டுமென்று சொல்லவில்லை.செயல்களின் பயன்களையே துறக்க வேண்டும் என்கிறான். நீங்கள் செயலற்றுக் கிடக்கவேண்டுமென்று அவன் சொல்லவில்லை. ஒரு நோக்கம் கருதிச் செய்ய வேண்டாம். உங்கள் பார்வைபலன்களின் மீது இருக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறான்.செயலுக்கும், செயலின் பயனுக்கும் இடையில் அர்த்தமுள்ள வேறுபாடு இருக்கின்றது. செயலில் மட்டும் மிகுந்த ஈடுபாடு காட்டும்போதுதான், அந்தச் செயல் உண்மையானதாகவும் அமைகின்றது. எல்லா அறிஞர்களுமே பயனுக்கான ஆசைகளை விட்டுவிடத்தான் சொல்கிறார்கள்.பலனை எதிர்பாராமல் செயல்படும் என்பதுதான் கண்ணனது உபதேச மையம்.செயல் முழுமையாக நடைபெற வேண்டும். கண்ணனது உபதேசசாரம் இதுதான்: செயலில் முழுமை என்பது நீங்கள் செய்துமுடித்தபின் மிச்சம் எதுவும் இல்லை; அப்புறம் அதைப் பற்றிக் கவலைப்பட எதுவுமே இல்லை என்பதுதான்.மிச்சம் மீதி ஏதாவது இருக்குமானால்தான் அதன் விளைவுக்காக, பலனுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டிவரும் அப்போது, அது முழுமை பெறவில்லை என்று பொருள். நீங்கள் எந்தப் பலனையும் பரிசையும் எதிர்பார்க்கவில்லையென்றால் ! நீங்கள் செய்த செயல் பூரணமானதாகி விடும்.அதனால்தான் கண்ணன் பலனைக் கடவுளிடம் விட்டுவிடு! என்கிறான். கடவுள் என்றால் உங்களையெல்லாம் கவனித்துப் படியளக்க, கணக்காயரும், நிர்வாக மேலாளருமான ஒரு ஆள், சுவர்க்கத்தில் எங்கோ உட்கார்ந்துகொண்டிருக்கிறார். என்று அர்த்தமல்ல. கடவுளிடம் விட்டுவிடு என்றால் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் மற்றதை இந்தப் பிரபஞ்ச இருப்பிடம் விட்டு விடுங்கள் என்று பொருள்.

ஆசையை அகற்றுவதையும், பற்றறுத் தலையும் கண்ணன், முறையே நிஷ்காம்யம், அனாசக்தி என்று குறிப்பிடுகிறான். ஒருவர், பற்று பாசங்களிலிருந்து விடுதலை பெறும்போது, மிகவுயர்ந்த நிலையை அடைவார். ஆனால், ஆசை, பற்றுகளிலிருந்து விடுதலை பெறுவதுசாதாரண ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. அதனால், ஆசை யின்மை , பற்றறுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிக் கூறுங்கள். இவற்றை அடைவதற்கான வழி முறைகளையும் விளக்குங்கள். முதலாவதாக, பற்றின்மையாகிய 'அனாசக்தி' என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மிகவும் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு வருகின்ற சொற்களில் ஒன்று 'அனாசக்தி' என்பது துரதிர்ஷ்ட வசமானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :