பெர்னார்டு ஷா
ஆசிரியர்:
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B7%E0%AE%BE?id=1587-2191-3333-3672
{1587-2191-3333-3672 [{புத்தகம் பற்றி பெர்னார்டு ஷா, பருவ எழுத்தாளராக இல்லாமல் தொழில் முறை எழுத்தாளராகவே விளங்கினார். தொழில்முறை என்றால், பண்பாட்டைச் சீரழித்து - மக்களை மடயராக்கிப் பணத்தைக் குவிக்கும் தொழில்முறை அன்று; ஒரு நாளைக்குக் குறைந்தது அய்ந்து பக்கங்களாவது எழுதுதல் வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டு எழுதிய எழுத்துலக வேந்தர் அவர்.
<br/> அவருடைய எழுத்துகள், அறிவுரைகள் வழங்கின; அன்புரைகளாக விளங்கின; பண்பாட்டைப் பறைசாற்றின; கண்டிப்பும் மிகுந்திருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக நகைச்சுவை வழங்கின.பெர்னார்டு ஷா அய்ம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்கள்; பல்வேறு புதினங்கள்; பல்வேறு கட்டுரைகள் என்று இந்த நாட்டுக்கு வழங்கியுள்ளார்.
<br/> பெர்னார்டு ஷா, நோபல் பரிசு பெற்றவர்.அவரது வாழ்க்கை மிகப்பெரிய போராட்ட வாழ்க்கை. பல்வேறு சிக்கல்களுக்கிடையில் எழுத்துலகில் மிகப்பெரிய சாதனை புரிந்தவர். அவரது வாழ்க்கை புதுமையும் புரட்சியும் நிறைந்தது. பலர்க்குக் குறிப்பாக இளைஞர்க்கு எடுத்துக் காட்டானது. வாழ்க்கையில் சாதனை படைக்கக் கருதும் ஒவ்வொருவரும் இந்த நூலைப் படித்தே தீரவேண்டும். அவரது வாழ்க்கை பலரது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866