பேச்சாற்றலை வளர்ப்பது எப்படி?

ஆசிரியர்: சுகிர்தன்

Category கல்வி
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00 ₹8.50    You Save ₹1
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



உலகில் எல்லா உயிரினங்களும் ஒலி கொடுக்கின்றன. ஆனால் பேசத் தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே. பேசுவதில் வெறும் தேவைகளைக் கேட்பதில் மட்டுமல்ல; அவன் தன் ஆளுமையையும் நிரூபிக்கிறான்.
"பேசுபவன் பேசினால் பொய்யையும் உண்மையென்று நம்பிவிடுவார்கள்'' என்கிறது ஒரு முதுமொழி. பேச்சுக்கு அத்தனை வலிமை உண்டு. பலர் தங்களது பேச்சாற்றலால் நாட்டின் உயர்பதவியை அடைந்திருக்கிறார்கள். அரசியலில் எழுத்தாற்றலைவிட பேச்சாற்றலே அதிக மதிப்பு உடையதாய் இருக்கிறது. காரணம் பெரும்பாலும் ஒரு மொழியை எழுதப் படிப்பதைவிட பேசுவதற்கே அதிகம் கற்று வைத்திருக்கிறார்கள்.
பலருக்கும் நன்றாகப் பேச வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் அவரிடம் உள்ள சில குணங்கள் அதைத் தடுத்துவிடுகின்றன. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல நல்ல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்குக்கூட மேடையேறி;ப பேசுவது என்பது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகிர்தன் :

கல்வி :

சங்கர் பதிப்பகம் :