பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவு முறை)

ஆசிரியர்: நியாண்டர் செல்வன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper back
Pages 184
ISBN978-93-84149-68-0
Weight200 grams
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நம்பகமானது அறிவியல்பூர்வமானது நிரூபிக்கப்பட்டது
உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்த நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகள் தவறானவை மட்டுமல்ல, நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இனி நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாகரிகம் என்று நீங்கள் கருதும் இன்றைய உணவு கலாசாரத்தில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆதி மனிதனின் உணவு வழக்கத்துக்குத் திரும்பவேண்டும். உங்களுக்குத் தேவை உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற நம்பகமான, அறிவியல்பூர்வமான பேலியோ டயட் கொழுப்பு, எடை கூடும் என்றெல்லாம் பயந்து நீங்கள் இதுவரை ஒதுக்கிவைத்த பல முக்கியமான உணவுப் பொருள்களை இனி தங்கு தடையின்றி உட்கொள்ளலாம். அதே சமயம், ஆரோக்கியமானது, சத்தானது என்றெல்லாம் கருதி நீங்கள் உணவில் சேர்த்துவந்த பல உணவு வகைகளை இனி நீங்கள் ஒதுக்கி வைக்கவேண்டும். இந்த பேலியோ டயட்டுக்கு நீங்கள் மாறுவதன் மூலம், உடல் எடையைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும், உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து தகுந்த பின்னணியுடன் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் நியாண்டர் செல்வன். ஃபேஸ்புக்கில் பல லட்சம் பேரால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டுவரும் வெற்றிகரமான டயட் முறை இது.
தொந்தி, அதிக கொழுப்பு, எடை ஆகியவற்றைக் குறைக்கவேண்டியது உங்கள் அழகுக்காக அல்ல, ஆரோக்கியத்துக்காக, முறையான உணவு வழக்கத்தைக் கையாண்டால் எடை குறைவதோடு உடல் நலனும் மேம்படும் என்பதே இந்தப் புத்தகம் உணர்த்தும் செய்தி,
டாக்டர் புருனோ மஸ்கரணாஸ், M.B.,B.S., M.Ch.


உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

கிழக்கு பதிப்பகம் :