பொன்மழை (தமிழ்ப்பாடல்)
ஆசிரியர்:
ஏ.எஸ்.வழித்துணைராமன்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%29?id=1615-3953-5866-9074
{1615-3953-5866-9074 [{புத்தகம் பற்றி ஆதி சங்கர பகவத் பாதாள் தரணி வாழ் மக்கள் எல்லாம் - சகல சம்பத்துகளும் பெற்று வாழ்வதற்கு என்றே தந்தருளிய பிரசாத மாலை-“பொன்மழை." வடமொழியில் ஆதி சங்கரர் செய்த 21 தோத்திரப் பாமாலைகளை அவர்கள் சுருக்கமாகத் தந்ததை, அடியேனும் அறுசீர் விருத்தப் பாக்கள் இருபத்தி ஒன்றில், கூடியவரை மூலக்கருத்து பிறழா வண்ணம் எழுதி யிருக்கிறேன்.

வணக்கத்திற்குரிய வள்ளற் பெருமானின் தித்திக்கும் திருவருட்பாக்களில் பொருத்தமான சிலவற்றையும் ஆங்காங்கே சேர்த்துள்ளேன். பொற்குடத்துக்குப் பொட்டிட்டதுபோல், அவை நூலுக்குப் பெருமை சேர்த்துள்ளதை வாசகர்கள் அறிய முடியும்.

'சாந்தி' என்ற என் தம்பி ஒருவரின் மகள் வடமொழி கற்றவள். அவளும் சமஸ்கிருத பத உரையைச் சரி பார்த்திருக்கிறாள். அவருக்கு என் நன்றி. இதைப் பக்தி பரவசத்துடன் பாடினால் எந்தப் பொருளும் கோடி கோடியாகக் கொட்டும் என்பது உலகப் பிரசித்தம்.

ஆகவே, ஸ்ரீதேவியே பாரதி பதிப்பகத்து அதிபர் உயர்திரு. பழ. சிதம்பரம் அவர்கள் மூலமாக என்னையும் இதனை எழுதித் தரப் பணித்தாள் எனக் கருதுகிறேன். எனவே, இதை அவள் அருளாலே அவள் தாள் வணங்கி, முழுமுதல் தெய்வமாம் ஸ்ரீ லட்சுமி தேவியின் பாதக் கமலங்களில் படைக்கிறேன்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866