பொன்மொழிகள் 1000
ஆசிரியர்:
உதயணன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+1000?id=1274-5143-7760-2750
{1274-5143-7760-2750 [{புத்தகம் பற்றி தானும் நன்றாக வாழ்ந்து பிறரும் நன்றாக வாழ வழிகாட்டுவதுடன் அவருக்குத் தேவைப்படும் சேவைகளையும் செய்து வாழ வழிகாட்டுபவைதாம் அறநெறிகள். அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை அறக்கருத்துகளும் அறநெறிமுறைகளும் ஏராளமாக இலக்கியங்களாகவும், சமயங்களாகவும், நன்னெறிகளாகவும் வழங்கி வந்துள்ளன. அறநெறிக்கருத்துகள் என்பவை பட்டறிவின் மூலம் பெற்றவை. ஒருவன் தான்பெற்ற பட்டறிவினை மற்றவருடைய பயன்பாட்டுக்காக உரைக்கும் போது அது பயனுள்ள வகையில் அமைந்தால் அறநெறிகளாகின்றன.நன்னெறிகளாகி நல்லொழுக்கம் காக்கின்றன.
<br/> அந்த வகையில் அமைந்த அறநெறிக் கருத்துகளின் தொகுப்பே பொன்மொழிகள் என்னும் இந்நூல். அறிநெறிகளை அடிப்படையாகக் கொண்டு 1000 பொன்மொழிகளாக அமைந்துள்ளது. ஒழுக்கமாகவும் உயர்ந்த ஞானத்துடனும் உள்ளத்துடனும் நல்லன எண்ணி நல்லன செய்து நற்கதை அடைதலையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்நூலை வரலாற்று நாவலாசிரியர் திரு.உதயணன் அவர்கள் தொகுத்துள்ளார். மானுட வாழ்க்கையின் மீது கொண்டுள்ள அக்கறையினால் தான் பட்டவற்றை, கண்டவற்றை, கேட்டவற்றை, உணர்ந்தவற்றை, உணர்த்தப்பட வேண்டியவற்றைத் தொகுத்து எளிமையாகவும் கருத்துக் கோவையாகவும் அனைவருக்கும் பயன்படுகின்ற வகையில் தந்துள்ளார்.பொன்போல் போற்றிக் காக்கப்படவேண்டியவை இப் பொன்மொழிகள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866