போகர் அருளிய ஜெனன சாகரம் (பதவுரைச் சுருக்கம்)
ஆசிரியர்:
எஸ். சந்திரசேகர்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29?id=1876-2763-8981-5637
{1876-2763-8981-5637 [{புத்தகம்பற்றி பதிணெண் சித்தர்கள் அனைவரும் பன்னெடுங்காலமாக இவ்வுலகில் வாழ்ந்து நூல்கள் இயற்றி சமுதாயத்தில் பணிகளை ஆற்றிவிட்டு சமாதியில் போய் அமர்ந்தனர். அந்த வரிசையில் பிரசித்தி பெற்ற மகாசித்தர் போகர், சமாதிக்குச் செல்லுமுன் தன் முந்தைய ஜனனங்களின் ரகசியத்தை வெட்ட வெளிச்சமாய் தன் 'போகர் ஜெனன சாகரம்' என்ற நூலில் உரைத்துள்ளார். பரம்பொருளிலிருந்து தோன்றிய அனைத்தையும் நுணுக்கமாக விளக்கி அதில் தன்னுடைய அவதாரங்களின் பங்கு என்ன என்பது வரை சொல்லியுள்ளதைப் படிக்க ஆவல் மேலோங்குகிறது. இந்த அரிய நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
<br/>} {பதிப்புரை ஒரு பாடல் கொண்ட ஞான சூத்திரம் முதல் பல்லாயிரம் பாடல்கள் கொண்ட காண் டங்கள் வரை சித்தர் போகர் பல நூல்கள் அருளி m யுள்ளார். இதில் 'ஜெனன சாகரம்' என்ற நூல் முற்றிலும் வேறுபடுகிறது. எல்லாம் கடந்த பிரம்மக்ஞானியாக தன்னை வெளிக்காட்டி யுள்ளார். ஈசன் முதல் ஈசல் வரை 'அகம் பிரம் மாஸ்மி'யாக பாவித்து தத்துவங்கள் உரைத்துள்ளார் எல்லாவற்றிலும் பூரணமாய் நிறைந்து ஐக்கியமான பரபிரம்மப் பொருளாகத் தொடங்கி, நந்தி திருமால் முருகன் இந்திரன் கிருஷ்ணன் நபி என்று பல்வேறு அவதார அம்சங்களாகவும், முத்தொழிலைப் புரிந்தும், சிருஷ்டிக்கப்பட்ட சித்தர்களாகவும், அந்தந்த நிலையிலிருந்து போகர் பேசியது ஆச்சரியத்தைத் தரும். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866