போகர் 7000 : சப்தகாண்டம் ஒரு பார்வை

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication லியோ பப்ளிகேஷன்ஸ்
FormatPaper back
Pages 192
Weight200 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபோகர் 7000 என்ற சப்தகாண்ட நூலுக்கு சுருக்கமாகவும், எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையிலும் உரை எழுதியுள்ள ஆசிரியர் திரு. எஸ். சந்திரசேகர் பாராட்டுக்குரியவர். படிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளபோதும் மூல நூலின் கனம் குறையாமல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இவருடைய எழுத்து நடை உள்ளது என்பது சிறப்பம்சம்.
போகரே தான் எழுதிய முதல் பிரம்மாண்ட நூலை ஒரு பங்காக சுருக்கிய பின் சப்தகாண்டத்தை இயற்றினார் என அறிகிறோம். அப்படி இருக்க, அந்த நூலையும் ஆசிரியர் சுருக்கி இயன்றவரை சாரம் குறையாமல் விளக்கவுரை தந்துள்ளார் என்றால் அது சித்தருடைய ஆசிகள் இல்லாமல் நடக்க கூடியதல்ல. ஆசிரியரின் பொறுமையான ஆராய்ச்சியும் உழைப்பும் இதில் வெளிப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
முதல் முறை படிக்கும்போதே வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் இப்புத்தகம் உள்ளது. போகருடைய எண்ணற்ற மருத்துவ குளிகைகள், ஜால வித்தைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், எளிய கற்பங்கள், மந்திர பிரயோகங்கள், உலக அதிசியங்கள், யுகங்களின் நிகழ்வுகள் என்று பல விஷயங்களை காண்டம் வாரியாக இங்கே அருமையாகத் தந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். சந்திரசேகர் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :