போகர் 7000 ஐந்தாம் காண்டம்
ஆசிரியர்:
ஆர்.சி.மோகன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+7000+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1096-9913-2749-0114
{1096-9913-2749-0114 [{புத்தகம் பற்றி அறிவியல் துறைக்கு அடித்தளமிட்டவர்களே தமிழ் நாட்டுச் சித்தர்கள்தான் என்று திண்ணமாகக் கூறலாம். மற்ற நாடுகளில் வேதியலைப் பற்றிய சிந்தனை ஆரம்பமாவதற்கு வெகு காலத்திற்கு முன்பே சித்தர்கள் வேதியலை வெற்றிகரமாகக் கையாண்டார்கள் எனலாம்.

தாவரங்களின் வேதியல் தன்மைகளை வெகு நுட்பமாக ஆராய்ந்து, உலோகங்கள் உப்புக்களோடு சேரும் காலத்தில் உண்டாகும் விளைவுகளையும் கண்கூடாகக் கண்டு ஆராய்ந்தவர்கள் தமிழ்நாட்டுச் சித்தர்கள். இதற்கு ஒரு நிதரிசனமான எடுத்துக்காட்டு பழனி தண்டபாணி சிலை.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது எளிதான வேலை அல்ல. அதிலும் அவற்றை ஒன்றோடு ஒன்று சேர்த்து குணம் மாறாமலும் தன்மைகள் கெட்டுப் போகாமலும் இணைத்து உருவாக்குவது என்பது ஒரு வேதியல் அற்புதமாகும் என்றே சொல்லலாம். போகர் அதைச் செய்து காட்டினார்.

போகரிடம் காணப்படும் தனிச்சிறப்பு என்ன வென்றால் அவர் m இரசவாதம் செய்வதற்கு அநேகம் முறைகளைக் கூறியுள்ளார். மற்ற சித்தர்கள் யாரும் அந்த அளவு சொல்லவில்லை.

போகர் கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி யாராவது தங்கம் செய்திருக்கிறார்களா என்பது கேள்வி. தங்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் தங்களுடைய சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தவர்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.

இங்கே ஒரு சின்ன எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறோம். சமையல் கலை புத்தகத்தை வைத்துக்கொண்டு வாய்க்கு ருசியாகச் சமைத்துச் சாப்பிட்டு விடமுடியுமா? சமையல் செய்யத்தெரியாத ஒருவர் புத்தகத்தை வைத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தால் அதை வாயில் வைக்கவே முடியாது.

அதேபோல்தான்.....! இரச வாதம் செய்வது பற்றிய ஏட்டறிவு மாத்திரம் அதைச் செய்வதற்குப் போதாது. ஒரு குருவின் அருகிலிருந்து பல ஆண்டு காலம் செயல் முறைகளையும் கைப் பக்குவங்களையும் பார்த்துப் படிப்படியாக ஆராய்ந்து நுணுக்கமாகக் கற்றுக் கொண்டாலே முடியும். அப்படிக் கற்றுக்கொடுப்பதற்குத் தகுந்த குரு இக்காலத்தில் இல்லை என்றே கூறி விடலாம்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866