போதி தர்மர்

ஆசிரியர்: ரிஷி

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிரஜ்னதாரா மூலமாக பல்வேறு ஆசிரியர்களின் துணையுடன் தான் போதிதர்மர் வித்தை பயிற்சி கற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இவரின் தற்காப்புக்கலை வித்தையை நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் நடைமுறையில் உள்ள தற்காப்புக் கலையான களரியோடு தொடர்புபடுத்தி பல அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். நோக்குவர்மம் பற்றி அவர் தன் கல்வியின்போது நூல் ஒன்றை எழுதியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. காலவெள்ளத்தால் போதிதர்மர் எழுதிய நோக்குவர்மம் நூல் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அவருடைய சீனப்பயணமும் இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. அவர் தரைவழி தான் சீனாவை அடைந்தார் என்றும், கடற்பயணம் செய்து சீனாவை அடைந்தார் என்றும் இரண்டுவிதமான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. இப்படி பல குழப்பமான முரண்பாடுகளான தகவல்கள் நமக்குக் கிடைத்த போதும் அவைகளில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூலைப் படைத்திருக்கிறேன்.
கடல் கடந்து சென்று நம் ஆதி தமிழரின் வீரத்தையும், ஞானத்தையும் பரப்பிய போதிதர்மரை நினைவு கொள்வதோடு, தமிழன் தன் வாழ்வியலில் அதை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரிஷி :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

குறிஞ்சி பதிப்பகம் :