மகாத்மா புலே - தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
ஆசிரியர்:
சிங்கராயர்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87+-+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1435-2998-2253-2976
{1435-2998-2253-2976 [{புத்தகம் பற்றி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (1827- 1890)
<br/>ஒடுக்கப்படும் மக்களால் மகாத்மா புலே என அன்புடன் அழைக்கப்படும் ஜோதிராவ் புலே அவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராட்டிரத்தில் வாழ்ந்த மாபெரும் சமூக சீர்திருத்தப் பெரியார் ஆவார். இவர் சாதிய அமைப்பு ஒழியப் போராடினார். தாழ்த்தப்பட்டோரின் விடுதலையைத் துணிவுடன் ஆதரித்தார். ஏழை விவசாயிகளின் வாழ்க்கை ஏற்றமுற பாடுபட்டார். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவருடைய வாழ்க்கை , பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக ஓயாமல் அவர் நடத்திய தீவிரப்போராட்டங்கள் நிரம்பிய வீரகாவியமாகும். பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி அளிப்பதே முக்கியமான முதல் வேலை என்றார் புலே. அதை செயல்படுத்த தன் துணைவிக்கு கல்வி அளிப்பதிலிருந்து தொடங்கினார். அவரும் அவர் துணைவியும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி அளித்தனர். பார்ப்பனியர் அவர்களுக்குப் பலவகையில் இன்னல்களை ஏற்படுத்தியும் தளராமல் தம் பணியைத் தொடர்ந்தார். விதவைகள் மறுமணத்தை மகாத்மா புலே ஆதரித்தார். குழந்தை மணத்தை எதிர்த்தார். அனாதைகளுக்கு இல்லம் திறந்தார். சாதி மதம் கடந்த சத்திய சோதக சமாஜம் (உண்மை நாடுவோர் சங்கம்) கண்டார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866