மகாபாரதம்-2

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சரித்திரநாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 568
Weight750 grams
₹450.00 ₹405.00    You Save ₹45
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மகாபாரதம்
அரசமரத்தின் கீழ் இருந்து பீமசேனன் தன்னுடைய ஆயுதங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான். வில்லின் நாணை இன்னும் இழுத்து கட்டினான். கட்டிய சுற்று இறுக இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான். நாணை இழுத்து டீங்காரம் செய்தான். இலக்கில்லாத நாணை இழுத்து வில்லை வளைத்து பளிச்சென்று அனுப்பினான். வில்லை மரத்தில் சார்த்திவிட்டு அம்புகளின் கூர்மையை, அடிச்சிறகை அதன் உறுதியை பரிசோதித்தான். கதையை எடுத்து அதன் தலைபாகத்தை உள்ளங்கையில் தாங்கினான். நிற்க வைத்தான். கதை உள்ளங்கையில் ஒரு சிறுவனைப் போல அமைதியாக நின்றது. எல்லா பக்கங்களிலும் எடை சரியாக இருப்பதால் தான் அந்த உலோகம் இப்படி நேராக நிற்கிறது. இல்லையெனில் கதை கொஞ்சம் கோணலாகி கீழே விழும்.
கத்தியை உருவி உயரே பிடிக்கும் பொழுது ஒரு அந்தணன் அருகே வந்து நெருங்கி இருந்த பாறை மீது உட்கார்ந்து கொண்டான். பீமனுக்கு இந்த நேரத்தில் ஒருவர் அருகே வந்து இருப்பது பிடிக்கவில்லை. ஆனாலும் வந்தது அந்தணன் என்பதால் மறுக்கவில்லை. தொடர்ந்து தன் வேலையிலேயே கூர்மையாக இருந்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :