மகாராணியின் அலுவலக வழி

ஆசிரியர்: மு.பழனியப்பன்

Category பெண்ணியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 122
Weight150 grams
₹60.00 ₹56.40    You Save ₹3
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தற்காலத்தில் பொதுவாக மகளிர் நிலைமை குறித்தும் கல்வி கற்றுப் பணிக்குச் செல்லும் மகளிர், இலக்கியம் படைக்கும் ஆற்றல் பெற்றுள்ள மகளிர்தம் படைப்புக்கள் குறித்தும் சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் நிலை ஏற்றம் அடையாமை குறித்தும் அறிஞர்களும் சமூகப்புரட்சியாளர்களும் எண்ணற்ற நூல்களைப் படைத்து வருகின்றனர். அவ்வகையில் புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர் மு. பழனியப்பன் அவர்கள் மகாராணியின் அலுவலகவழி' என்னும் தலைப்பில் மகளிர் நிலைமை அன்றும் இன்றும் என்பது குறித்து இருபது தலைப்புக்களில் ஓர் அரிய நூலைப் படைத்துள்ளார். பெண்ணியக் கண்ணோட்டத்துடன் இயற்றப்பெற்ற ஓர் ஆய்வு நூல் என்றே இதனைச் சுட்டலாம்.
பெண்ணியத் திறனாய்வின் அடிப்படையில் பெண்ணெழுத்துக்களின் திறனைப்போற்றியும், ஆண் படைப்புக்களில் பெண்களுக்கெதிரான கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளமைக்கும் ஆதாரமான கூற்றுக்கள் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெண்ணியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :