மகாவீரர் கதை

ஆசிரியர்: கீர்த்தி

Category கதைகள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 32
Weight50 grams
₹10.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜைன மதம் புத்த மதத்திற்கும் முன்னே தோன்றிய மதமாகும். அம்மதத்தின் குரு தீர்த்தங்கரர் என்று அழைக்கப்பட்டார். ஏற்கனவே இருபத்தி மூன்று தீர்த்தங்கரர்கள் தோன்றி மறைந்தபின் இருபத்திநான்காவது தீர்த்தங்கராக அவதரித்தவரே வர்த்தமான மகாவீரர் ஆவார். வட இந்தியாவைச் சேர்ந்த வைசாலி நாட்டினுள் அடங்கியிருந்த சிறிய நாடு குந்தபுரம் ஆகும். அந்நாட்டின் மன்னன் சித்தார்த்தனுக்கும் அவனது மனைவி திரிசலைக்கும் கி.மு.599 ஆம் ஆண்டு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. மன்னன் சித்தார்த்தன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு வேண்டிய பல நல்ல திட்டங்களை அறிவித்தான். சிறையில் அடைத்திருந்த பல கைதிகளை விடுதலை செய்தான். அதனால் குந்தபுரமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அவ்வேளையில் முனிவர் ஒருவர் மன்னன் சித்தார்த்தனிடம் வந்து, "மன்னா! இன்று தாங்கள் பல சிறைக் கைதிகளை மன்னித்து விடுதலை செய்தீர்கள். தங்கள் மகனோ பிறவிச் சிறைகளிலிருந்து மக்களை விடுவிக்கப் போகிறான்” என்று கூறிச் சென்றார். குழந்தை பிறந்த வேளையில் நாட்டில் நன்கு மழை பெய்தது. பயிர்கள் செழித்து வளர்ந்தன. செல்வம் பொங்கியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

கதைகள் :

சங்கர் பதிப்பகம் :