மஞ்சள் நிற ரிப்பன்

ஆசிரியர்: ஏகாதசி

Category சிறுகதைகள்
Publication எழுத்து
FormatPaperblack
Pages 112
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வீட்டில் விருந்தாக்கள் வந்திருக்கும் போது அம்மியில் அரைக்கிற மசாலா வாசனைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சொத்தை எழுதி வைத்துவிட்டு சும்மா திரியலாம். அப்படி இருக்கும் அம்மாவின் கை பக்குவம். நாகமலையில் பறித்துச் செய்த பிரண்டை ஊறுகாயிடம் கோழிக்கறியும் தோற்றுத்தான் போகிறது. வயிற்றின் மீது படுத்துக் கொள்கிற என் ஒன்பது வயது மகனின் அன்பின் அழகில் கரைகிற நிமிடங்களை ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என அச்சிடப்பட்ட தாள்களால் தந்துவிட முடிந்ததில்லை. எனக்கும் என் மனைவிக்கும் குடும்பத்தின் புன்னகைதான் முக்கியம். தாலியை அடகு வைத்துச் சோறு தின்றோம் திருமணநாளன்று. இரவு 11.30 மணிக்கு கட்சிக் கூட்டம் முடிந்ததும் வீட்டிற்குச் செல்ல மனசின்றி ஒரு டீ கடையில் தோழர்கள் தேங்குகிறோமே, வெறும் டீக்காகவா? இப்படி எத்தனையோ உயிர் கலந்த நிகழ்வுகளை எழுத்துக்குள் அடைத்து விடவா முடியும்?- ஏகாதசி.கணபதியின் குறட்டைச் சத்தத்தில் 2, 3 கரப்பான் பூச்சிகள் செத்துக் கிடக்க, காய்கறிக்கார ஆணுடன் சும்மா கதை பேச படி தாண்டுகிறாள் பவானி. "தாழ்" கதை அந்தக் காலத்து கு.ப.ராஜகோபாலனின் “ஆற்றாமை” போன்ற, கு.அழகிரிசாமியின் 'அழகம்மாள்" போன்ற ஒரு நுட்பமான கதையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

எழுத்து :