மணிபல்லவம் (பாகம்-1)
ஆசிரியர்:
நா.பார்த்தசாரதி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1%29?id=1337-8042-8856-1806
{1337-8042-8856-1806 [{புத்தகம் பற்றி பெரியதும் அளப்பரியதுமான பூம்புகார் நகரை உங்கள் கண்பார்வையிற் கொண்டு வந்து காட்ட முயல்கிறேன். அதோ ! சிறப்புமிக்க சித்திரைமாதம். காவிரிப் பூம்பட்டினம் இந்திர விழா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. எங்கும் இனிய ஒலிகள், எங்கும் அலங்காரப் பேரொளி. எங்கும் மணமலர், அகிற்புகை வாசனை, எங்கும் மக்கள் வெள்ளம், காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்தில் விழாக் கூட்டம், எங்கு நோக்கினும் பானைகளிலும், குதிரைகளிலும், தேரிலும், சித்திர ஊர்திதகளிலும் விரையும் மக்கள், கடல் முடிந்து கரை தொடங்குமிடத்தில் மற்றொரு கடல் தொடங்கி ஆரவாரம் செய்வதுபோல் அலை அலையாய் மக்கள் குழுமியிருக்கின்றனர். மஞ்சளும் சிவப்புமாய் வண்ண வண்ண நிறம் காட்டும் மாலை வானத்தில் கோல எழில் குலவும் வேளை அடங்கிய பொழுது, அமைந்த நேரம், அந்த நேரத்தில் அந்த விழாக் கோலங்கொண்ட கடற்கரையில் ஒரு பரபரப்பான இடத்தில் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கதாநாயகனைச் சந்திக்கிறோம். கதை தொடங்குகிறது. கதை மாளிகைக் குள்ளே நுழையலாம். வாருங்கள்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866